உங்களுடன் ஸ்டாலின் திட்டம் / UNGALUDAN STALIN THITTAM
TNPSCSHOUTERSJuly 18, 2025
0
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் / UNGALUDAN STALIN THITTAM: அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை, சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் ஜூலை 15ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இந்த திட்ட முகாம், எந்தெந்த பகுதிகளில் என்று நடைபெறுகிறது என்பதை அறிந்துகொள்ள வசதியாக https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நாள்தோறும் எங்கெல்லாம் முகாம் நடைபெறும் என்பதை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, ஒவ்வொரு நாளும், அந்தந்த தேதிகளில் நடைபெறும் முகாம்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த முகாமில், மகளிா் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம் என்பதால், பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாகவும் மாறியிருக்கிறது.
நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, உடனடியாகத் தீா்வு அளிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிற இனங்களில் அதிகபட்சமாக 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புகைச் சான்றும் வழங்கப்படுகிறது என்பதுதான் கூடுதல் அம்சம்.
இதுவரை கிடைத்த விண்ணப்பங்களில், பாதிக்கும் மேல் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே உள்ளன. முதல்கட்டமாக, ஜூலை 15-இல் தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
UNGALUDAN STALIN THITTAM: Chief Minister M.K. Stalin launched the project called Ungaludan Stalin, which provides services of government departments near the homes of the people, in Chidambaram Municipality on July 15.
A website called https://ungaludanstalin.tn.gov.in/ has been launched to help you know in which areas this project camp is being held. In this, arrangements have been made to know where the camp will be held every day, district-wise.
In the first phase, camps will be held every day, on the respective dates. In this camp, the women who are eligible for the Women's Rights Scheme can fill out and submit the application, which has become an expectation of most people.
43 services of 13 government departments in urban areas and 46 services of 15 government departments in rural areas are being provided through the Ungaludan Stalin Camp project.
Action is being taken on the applications received in these camps in a manner that allows for immediate resolution. The Tamil Nadu government has ordered that resolution should be sought within a maximum of 45 days in other categories.
An additional feature is that petitions are received from the people through departments including Municipal Administration and Drinking Water Supply Department, Revenue and Disaster Management Department, Medical and Public Welfare Department, Energy Department, Cooperatives, Food and Consumer Protection Department, Disabled Welfare Department, Adi Dravidian and Tribal Welfare Department, Backward Classes, Most Backward Classes, Minorities Welfare Department, Labour Welfare and Skill Development Department, Housing and Urban Development Department, Micro, Small and Medium Enterprises Department, Social Welfare and Women's Rights Department, Information Technology and Digital Services Department, etc. at the Stalin camp.
Of the applications received so far, more than half are for women's rights grants. It is noteworthy that in the first phase, the camps will be held from July 15th to August 15th.