
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது துணை போர்க் கப்பலான 'நிஸ்டார்' கடற்படையிடம் ஒப்படைப்பு
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது துணை போர்க் கப்பலான 'நிஸ்டார்', இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் ஜூலை 8ஆம் தேதிஃ விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- இந்தப் போர்க்கப்பல் ஆழ்கடல் செயல்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சமஸ்கிருத மொழியில் 'நிஸ்டார்' என்ற வார்த்தைக்கு விடுதலை, மீட்பு, கருணை என்று பொருள்படும். அந்த வகையில் இந்த கப்பலுக்கு நிஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 10,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 118 மீ நீளம் கொண்டதாகவும், அதிநவீன ஆழ்கடல் நீச்சல் உபகரணங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் 300 மீ ஆழத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- நீர்மூழ்கிக் கப்பலில் அவசரநிலை ஏற்படும் சூழலில், அதில் உள்ள பணியாளர்களை மீட்டு பத்திரமாக வெளியேற்றும் வகையில், ஆழ்கடல் பகுதிகளில் நீரில் மூழ்கிச் செல்லக் கூடிய வகையிலும், 1000 மீ ஆழம் வரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கப்பல் பயன்படும்.
- ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
- இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விமானம் விழுந்த இடத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும், புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுந்ததாகவும் சாட்சிகள் தெரிவித்தனர்.
- இந்த விபத்து குறித்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த விமானம் இந்திய விமானப்படையின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான ஜாகுவார் ஆகும். இது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு, பயிற்சி மற்றும் போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகிறது.
- பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, இன்று பிரேசிலின் மிக உயரிய தேசிய விருதான “தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ்” விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வழங்கினார்.
- இந்த சிறப்புமிக்க உயர் விருதிற்காக பிரதமர், அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
- பிரேசில் குடியரசின் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஜூலை 8 அன்று, பிரேசில் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.
- இதையடுத்து வரவிருக்கும் தசாப்தங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட உத்திசார்ந்த திட்டத்தை வகுக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
- இதனிடையே இரு நாடுக்களுக்கு இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்துகியுள்ள்ளன.
- சர்வதேச பயங்கரவாதம் மற்றும் எல்லை கடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களை எதிர்கொள்வது குறித்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
- டிஜிட்டல் மாற்றத்தில் வெற்றிகரமான பெரிய அளவிலான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒத்துழைப்பில் ஒப்பந்தம்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.
- பிரேசில் வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் இடையே வேளாண் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தம்.
- வகைப்படுத்தப்பட்ட தகவல்களின் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கான ஒப்பந்தம்.
- இந்தியாவின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை மற்றும் பிரேசிலின் வர்த்தகம், தொழில்துறை மேம்பாட்டு கழகத்தின் போட்டித்திறன் மற்றும் ஒழுங்குமுறை கொள்கை செயலகம் ஆகியவற்றுக்கு இடையே அறிவுசார் சொத்துரிமைத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்.