
3rd JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுத் தலமாகச் செயல்படவிருக்கும் "தமிழ் அறிவு வளாகம்" (Tamil Knowledge Campus) கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார்.
- 1994ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மீள்கட்டமைக்கும் செயல்பாடுகளையும் இந்நூலகம் மேற்கொண்டு வருகிறது.
- நாட்டில் 2025 ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 6.2% உயர்ந்து ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.73 லட்சம் கோடி) தற்போது 6.2 சதவீத அதிக வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.
- 'கடந்த ஜூனில் உள்நாட்டு பரிவா்த்தனைகளில் இருந்து ரூ.1.38 லட்சம் கோடியும், இறக்குமதியில் இருந்து ரூ.45,690 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவை முறையே 4.6 சதவீதம், 11.4 சதவீத அதிகரிப்பாகும்.
- ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.34,558 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,268 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.93,280 கோடி, கூடுதல் வரி ரூ.13,491 கோடியாகும். திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.25,491 கோடி.
- தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்கள் 4 முதல் 8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதேநேரம், உத்தர பிரதேசம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் 1 முதல் 4 சதவீத அதிகரிப்பே காணப்படுகிறது.
- கானா, டிரினிடாட் டுபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். அக்காராவில் விமான நிலையத்திற்கு வந்த அந்நாட்டு அதிபர் மஹாமா பிரதமர் மோடியை வரவேற்று அழைத்து சென்றார்.
- இதையடுத்து கானா நாட்டின் அதிபர் மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
- இதற்கிடையே, உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்' என்ற தேசிய விருதைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.'