
30th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரஷியாவில் 8.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்
- ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கி.மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆகப் பதிவாகியுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இதையடுத்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் 1 மீட்டர் வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஜப்பானின் நான்கு பெரிய தீவுகளில் வடக்கே உள்ள ஹொக்கைடோவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், இது 3 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன.
- இதற்கான ஒப்பந்தம் 2014 செப். 30-இல் கையொப்பமானது. அதன்பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் சுமாா் ரூ. 12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றன.
- இதனைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில் நிசாா் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ஆவது ஏவுதளத்திலிருந்து ஏவ திட்டமிடப்பட்டது.
- இந்த நிலையில், ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுன்ட்டவுன் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், இன்று(புதன்கிழமை) மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படவுள்ளது.