
29th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவில் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை 10.7% உயர்வு
- நாடு முழுவதும் மின்னணு முறையில் பணப்பரிமாற்றம் ஆண்டுக்கு ஆண்டு 10.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதை அளவிடும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெக்ஸ் குறியீடு தெரிவிக்கிறது.
- இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2021 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்டு வருகிறது. மார்ச் 2025க்கான குறியீடு செப்டம்பர் 2024ல் 465.33 ஆகவும் மார்ச் 2024ல் 445.5 ஆக இருந்து 493.22 ஆக உள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ 2025 ஜூலை 28 மற்றும் 29 தேதிகளில் ஒடிசா கடல்பகுதியில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பிரளைய் ஏவுகணையின் இரண்டு முறை அடுத்தடுத்து ஏவப்பட்டு சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
- ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சரிபார்க்க இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏவுகணைகள் அதன் பாதையை துல்லியமாகப் பின்பற்றி, இலக்கை தாக்கின. அனைத்து துணை அமைப்புகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டன.
- பிரளைய் என்பது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட திட எரிபொருள் பகுதியளவு உந்து விசைத்திறன் கொண்ட ஏவுகணையாகும்.
- இது உயர் துல்லியத்தை உறுதி செய்வதற்காக அதிநவீன வழிகாட்டுதல் அமைப்பை பயன்படுத்துகிறது. இந்த ஏவுகணை பல்வேறு இலக்குகளுக்கு எதிராக பல வகையான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.