27th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்
- ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா, சோழா் கால கோயில்கள் கண்காட்சியுடன் புதன்கிழமை(ஜூலை 23) மாலை தொடங்கியது.
- இந்த விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பெருவுடையாரை தரிசனம் செய்து, கோயில் வளாகம் மற்றும் புகைப்பட கண்காட்சியை பாா்வையிட்டார். பின்னா் நடைபெற்ற விழாவில், மாமன்னா் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
- நிறைவு நாள் விழாவில் இசையமைப்பாளா் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இசை நிகழ்ச்சியில் இளையராஜா இசைத்த ஓம் சிவோஹம் பாடலால் பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர். விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்ஃபனியையும் இளையராஜா இசைத்தார்.
- இந்தியா-சிங்கப்பூர் கூட்டு ராணுவப் பயிற்சியின் 14-வது பதிப்பான "போல்ட் குருக்ஷேத்ரா 2025" என்ற பயிற்சி இன்று (27 ஜூலை 2025) ஜோத்பூரில் தொடங்கி 2025 ஆகஸ்ட் 04 வரை நடைபெறுகிறது.
- இந்தப் பயிற்சியில் 4-வது சிங்கப்பூர் கவசப் பிரிவின் 42வது படைப்பிரிவும், இந்திய ராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவும் பங்கேற்றுள்ளன.
- இந்தப் பயிற்சி, இயந்திரமயமாக்கப்பட்ட போருக்கான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த பயிற்சியை நோக்கமாகக் கொண்ட போர் பயிற்சியாக நடத்தப்படுகிறது. இது இந்திய ராணுவத்தின் தளவாடங்களின் கண்காட்சியுடன் நிறைவடையும்.
- தொடக்க விழாவில் இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவின் கட்டளை அதிகாரி கர்னல் அர்ஜுன் கணபதி இந்திய பிரிவுக்குத் தலைமை வகித்தார்.
- 42 சிங்கப்பூர் கவசப் படைப்பிரிவின் பட்டாலியன் கமாண்டர் லெப்டினன்ட் கர்னல் கியூ ஜி யூங் சிங்கப்பூர் அணிக்கு தலைமை வகித்தார்.
- போல்ட் குருக்ஷேத்ரா 2025 பயிற்சி, இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி ஒத்துழைப்பை வளர்க்கும்.