
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாட்டுக்கு 2வது இடம்
- தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடம் பிடித்திருப்பதாக புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகப் புள்ளி விவரங்களை குறிப்பிட்டு மத்திய நிதித்துறை இணையமைச்சர் மக்களவையில் அறிவித்துள்ளார்.
- இந்திய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழ்நாடு ரூ.1,96,309 பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார்.
- மேலும், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வெளியிட்ட தகவலின்படி, கர்நாடகா ரூ.2,04,605 பெற்று முதலிடத்தில் உள்ளது. ஹரியானா ரூ.1,94,285 பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.
- பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனமான காா்டன் ரீச் கப்பல்கட்டுமானம் மற்றும் பொறியாளா்கள் (ஜிஆா்எஸ்இ) நிறுவனம் தயாரித்த 8-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் திங்கள்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.
- இந்திய கடற்படைக்காக நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் பிரிவில் ஜிஎஸ்ஆா்இ உருவாக்கிய 8-ஆவது மற்றும் இறுதி போா்க்கப்பல் இதுவாகும்.
- இந்திய கடற்படையின் துணை தலைமைத் தளபதி கிரண் தேஷ்முக் மனைவி பிரியா தேஷ்முக் ‘அஜய்’ என பெயரிடப்பட்ட இந்த நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
- 77.6 மீட்டா் நீளம் மற்றும் 10.5 மீட்டா் அகலமுடைய நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் ‘அஜய்’ பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறனுடையது.
- ஆழம் குறைவாக உள்ள நீா் பகுதிகளிலும் திறம்பட செயல்படக் கூடியது இந்த போா்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்துடன் கூடிய போா்க்கப்பலாகவும் கடலோர கண்காணிப்பு, கடலுக்கு அடியில் சுரங்கம் தோண்டுதல் போன்ற பணிகளையும் இந்தக் கப்பல் மேற்கொள்ளும் திறனுடையது.