
1st JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு, "வெற்றி நிச்சயம்" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார்.
- உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு என்பது இல்லமல் இருந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறி உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
- அதன்படி உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு தொடர்பாக இடஒதுக்கீடு செயல்பாட்டுக்கு கெண்டு வரப்பட்டுள்ளது.
- பணி வாரியாக பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள், சேம்பர் உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு இடஒதுக்கீடு அமலாக உள்ளது. இதற்கான கொள்கை வரையறைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த பணிகளில் பட்டியலின ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 15 சதவீதமும், பழங்குடியின பிரிவினருக்கு 7.5 சதவீத பணியிங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் நேரடி ஆட்சேர்ப்பு இடஒதுக்கீட்டு விதிமுறைகளை போல் இந்த இடஒதுக்கீடு சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற பணியாளர்களுக்கு இப்படியான இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும்.
- இந்த நடைமுறை 2025 ஜூன் மாதம் 23-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி உச்சநீதிமன்றத்தின் அனைத்து பணியாளர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- இது உச்ச நீதித்துறையின் உள் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. உச்சநீதிமன்றத்தை எடுத்து கொண்டால் நீதிபதிகள் உள்பட யாருக்கும் இடஒதுக்கீடு என்பது கிடையாது.
- 2025-26 நிதியாண்டில் நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி தொடர்ந்து வளர்ச்சியை எட்டியுள்ளது. கனிம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகளின்கீழ் மொத்த கனிம உற்பத்தியில் இரும்புத் தாது 70 சதவீதமாக உள்ளது.
- 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 52.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த இரும்புத் தாது உற்பத்தி 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 53 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
- 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) மாங்கனீசு தாது உற்பத்தி 1.4%-ஆக அதிகரித்து 0.70 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.69 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
- நடப்பு நிதியாண்டில் பாக்சைட் தாது உற்பத்தியும் 0.9% அதிகரித்து 4.73 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2024-25 நிதியாண்டில் 4.69 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
- துத்தநாக தாது உற்பத்தி நடப்பு (2025-26) நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 3.7% அதிகரித்து 0.28 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 0.27 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.
- சுண்ணாம்புக்கல் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 80.10 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது, இது 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 1.6% அதிகரித்து 81.40 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
- இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 1.3% வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இது 6.98 லட்சம் டன்னாக இருந்தது. 2025-26 நிதியாண்டில் (ஏப்ரல்-மே) 7.07 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட செம்பு உற்பத்தி 2024-25 (ஏப்ரல்-மே) காலகட்டத்தில், 0.69 லட்சம் டன்னிலிருந்து 0.99 லட்சம் டன்னாக உயர்ந்து 43.5% வளர்ச்சிக்கண்டுள்ளது.
- 17ஏ திட்டத்தின் கீழ் மசகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட இரண்டாவது தாக்குதல் போர்க்கப்பல் உதயகிரி, இந்திய கடற்படை வசம் இன்று (01.07.2025) ஒப்படைக்கப்பட்டது
- பல்நோக்குத் திறன் கொண்ட இந்த வகை போர்க்கப்பல்கள் இந்தியாவிற்கு எதிரான கடல்சார் அச்சுறுத்தல்களைக் கையாளும் திறன் கொண்டவையாகும். உதயகிரி கப்பல், முன்னாள் ஐஎன்எஸ் உதயகிரியின் நவீன வடிவமாகும்.
- 17ஏ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் போர்க்கப்பல்கள் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்ஸார் அமைப்பு உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன.
- உதயகிரி போர்க்கப்பல் கட்டுமான பணி தொடங்கிய நாளிலிருந்து 37 மாதங்களில் நிறைவு பெற்று இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் விளையாட்டு சூழலை மறுவடிவமைத்து, விளையாட்டு மூலம் குடிமக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியான தேசிய விளையாட்டுக் கொள்கை 2025-க்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்தப் புதிய கொள்கை, தற்போதுள்ள தேசிய விளையாட்டுக் கொள்கை 2001-க்கு மாற்றாகவும் இந்தியாவை உலகளாவிய விளையாட்டு சக்தி மையமாகவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்குவதற்கான வலுவான போட்டியாளராகவும் நிலைநிறுத்துவதற்கான தொலைநோக்கு மற்றும் திட்டமிடலை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- தேசிய விளையாட்டுக் கொள்கை 2025 என்பது மத்திய அமைச்சகங்கள், நிதி ஆயோக், மாநில அரசுகள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டு வீரர்கள், கள நிபுணர்கள் மற்றும் பொது பங்குதாரர்கள் ஆகியோரின் விரிவான ஆலோசனைகளால் உருவாக்கப்பட்டதாகும்.
- நாட்டின் ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பை மேம்படுத்தும் வகையில் உத்திசார் நடவடிக்கையாக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதன நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் திட்டத்திற்கு (ஆர்.டி.ஐ.)ஒப்புதல் அளித்துள்ளது.
- புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், ஆராய்ச்சிப் பணிகளை வர்த்தக மயமாக்குவதிலும் தனியார் துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்பு திட்டமானது தனியார் துறையின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களில் நீண்ட கால நிதியுதவி அல்லது மறுநிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
- இந்தத் திட்டம் தனியார் துறையின் முதலீடுகளை ஈரப்பதில் உள்ள தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தி, அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதை ஆதரிப்பதற்கும், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் (ரூ.15,000/- வரை) கிடைக்கும் அதே வேளையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளர்களுக்கு ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும். 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் பிரதமரின் ஐந்து திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக 2024-25 மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது, இதன் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.2 லட்சம் கோடி ஆகும்.
- வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைத் திட்டம் நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை ரூ.99,446 கோடி செலவினத்துடன், 2 ஆண்டுகளில் உருவாக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இவற்றில், 1.92 கோடி பயனாளிகள் முதன்முறையாகப் பணியில் இணைபவர்களாக இருப்பார்கள். இந்தத் திட்டத்தின் நன்மைகள் 2025 ஆகஸ்ட் 01 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்குப் பொருந்தும்.
- தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில் அமைக்கப்பட உள்ளது.
- தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87, அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது.
- போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதன் காரணமாக குறிப்பாக அதிக மக்கள் தொகை நடமாட்டம் கொண்ட பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் உள்ள முக்கிய நகரங்களில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்தத் திட்டத்தின்கீழ் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-87 இனி 4-வழிச் சாலையாக மேம்படுத்தப்படும்.
- இதன் மூலம் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். மேலும், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் போன்ற விரைவான வளர்ச்சி கண்டு வரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவிடும்.