
குடியரசுத் தலைவர் 2024–25ம் ஆண்டின் தூய்மைப் பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை வழங்கினார்
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார்பில் புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், 2024-25-ம் ஆண்டிற்கான தூய்மை பணி கணக்கெடுப்பிற்கான விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.
- இந்த விழாவில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், அத்துறைக்கான இணையமைச்சர் திரு டோகன் சாஹு முன்னிலையில், நாட்டில் தூய்மைப் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட 23 நகரங்கள் பாராட்டுதல்களைப் பெற்றன.
- இந்தியாவின் புதிய தலைமுறைக்கான நகரங்களாக, அகமதாபாத், போபால், லக்னோ போன்றவை சிறந்த தூய்மை நகரங்களாக உருவெடுத்துள்ளன. மஹாகும்ப மேளாவிற்கான சிறப்பு அங்கீகாரம் உட்பட 43 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- 2024-25-ம் ஆண்டிற்கான தூய்மைக்கான விருது வழங்கும் விழாவில், மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், சிறந்த கங்கா நகரத்திற்கான விருதை பிரயாக்ராஜு நகருக்கு வழங்கினார்.
- செகந்திராபாத் கண்டோன்மென்ட் பகுதி, சுகாதார முயற்சிகளுக்கான சிறந்த கண்டோன்மென்ட் வாரியமாக கௌரவிக்கப்பட்டது.
- துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்கான சிறந்த அர்ப்பணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜிவிஎம்சி விசாகப்பட்டினமும், ஜபல்பூர், கோரக்பூர் ஆகியவை சிறந்த துப்புரவுப் பணியாளர்களுக்கான பாதுகாப்பான நகரம் என அறிவிக்கப்பட்டன.
- ஏராளமான மக்கள் பங்கேற்ற உலகின் மிகப்பெரிய விழாவான மஹாகும்ப மேளாவின் போது, சிறப்பான நகர்ப்புற கழிவு மேலாண்மையை திறம்பட மேற்கொண்டதாக உத்தர பிரதேச மாநில அரசு, பிரயாக்ராஜ் மேளா சிறப்பு அதிகாரி மற்றும் பிரயாக்ராஜ் நகராட்சிக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் உயரமான பகுதிகளில் இலக்குகளை தாக்கும் பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- லடாக்கில் நேற்று (16.07.2025) இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை 4,500 மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த முடியும். இது 25 முதல் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டது.
- ராணுவ வான் பாதுகாப்பு அமைப்பும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ-வும் இணைந்து பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இதனை உருவாக்கியுள்ளன.
- நாட்டின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். இந்த சாதனைக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.