
14th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக அரசு வரலாற்றில் முதல்முறையாக செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
- தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக அரசு நியமிக்கிறது.
- முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும், கீழ்க்கண்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளார்.
- டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியம்.
- ககன்தீப் சிங் பேடி, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
- தீரஜ் குமார், ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
- பெ. அமுதா, ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
- மேற்கண்ட அதிகாரிகள் எந்தெந்த துறை சம்மந்தமாக செய்திகள் வெளியிட வேண்டும் என முதல்வரின் ஆணைப்படி அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள். அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.
- அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழ்நாட்டில் 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
- செங்கல்பட்டு (முகையூர், பனையூர்), விழுப்புரம் (மரக்காணம்), கடலூர் (சிலம்பிமங்கலம்) துறைமுகம் அமைக்க திட்டம். மயிலாடுதுறை (வானகிரி), நாகை (விழுந்தமாவடி), தூத்துக்குடி (மனப்பாடு), குமரி கடற்கரை பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
- துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டாளர்களுக்கு தொழில் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு அனுமதிகள் வழங்கப்படும். 30 வருடம் முதல் 99 வருடம் வரை நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.
- மத்திய பிரதேசம், கர்நாடகா, கவுஹாத்தி, பாட்னா, ஜார்காண்ட், திரிபுரா, தெலங்கான உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த், ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, 3 மாநிலங்களுக்கான ஆளுநரை நியிமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனைதொடர்ந்து லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பி.டி. மிஸ்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் புதிய துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும் ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவா மாநில ஆளுநராக அசோக் கஜபதி ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
- கிராண்ட்ஸ்லாம் தொடரில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது.
- இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் 22 வயது அல்காரஸ் பலப்பரீட்சை நடத்தினர்.
- விறுவிறுப்புடன் தொடங்கிய இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 3 செட்டையும் 6-4, 6-4, 6-4 என கைப்பற்றி ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
- அவருக்கு ரூ.35 கோடி பரிசாக வழங்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சிறப்பை அவர் படைத்தார்.
- ஃபிஃபா நடத்திய கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தன. இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, செல்ஸி அணிகள் மோதின. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் 3-0 என செல்ஸி அபார வெற்றி பெற்றது.
- கோலி பால்மர் 22,30-ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ஜாவோ பெட்ரோ 43-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து முதல் பாதியில் 3-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டாம் பாதியில் எவ்வளவு முயன்றும் பிஎஸ்ஜி அணியினால் கோல் அடிக்க முடியாமல் சென்றது.
- இந்தப் போட்டியில் 67 சதவிகித பந்தினை பிஎஸ்ஜி தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
- பிஎஸ்ஜி வீரர் நெவேஸுக்கு 85-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. செல்ஸி அணி 2-ஆவது முறையாக கிளப் உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
- முன்பாக 2021-இல் வென்றிருந்தது. ஃபிஃபா நடத்திய முதல் கிளப் உலகக் கோப்பை இது என்பது குறிப்பிட்டத்தக்கது.