
13th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்களை நியமித்தார்
- மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
- அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, முன்னாள் ஆசிரியர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக) மற்றும் வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகியோர் நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.
- இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மீதமுள்ள உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- விம்பிள்டன் கோப்பை அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை தோற்கடித்தாா்.
- இந்த வெற்றியின் மூலமாக, விம்பிள்டனில் முதல்முறையாக இறுதிச்சுற்றை அடைந்த ஸ்வியாடெக் அமெரிக்க வீராங்கனை அமாண்டா அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற கணக்குகளில் வீழ்த்தி பட்டம் வென்றார்.
- இறுதிச்சுற்றில் விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.