
11th JULY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உலகப் பொதுமறை திருக்குறள் நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் "உலகப் பொதுமறை திருக்குறள்" (TIRUKKURAL- Treasure of Universal Wisdom) என்னும் நூலினை வெளியிட்டார்.
- இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சேர்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.
- இத்திருக்குறள் நூல், எளிதில் வாசிப்பதற்கேற்ற விதத்தில் சீர் பிரிக்கப்பட்ட வடிவத்துடன் தமிழண்ணல் எழுதிய நுண்பொருள் விளக்கவுரை, பி.எஸ்.சுந்தரம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஓவியர் மணியம் செல்வத்தின் ஓவியம் என இருமொழிப்பதிப்பாக அமைந்துள்ளது.
- திருக்குறளைப் பயில விரும்பும் வெளிமாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள், மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் பெரிதும் பயன்தரும்.
- நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது.
- அந்த வகையில் 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் ரூ.1,066.80 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. நிதி உதவியை தவிர, மாநிலங்களுக்கு தேவையான பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படையை அனுப்புவது உட்பட அனைத்து தளவாட உதவிகளையும் வழங்குவது அரசின் முன்னுரிமையாக உள்ளது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில், அசாமுக்கு ரூ.375.60 கோடி, மணிப்பூருக்கு ரூ.29.20 கோடி, மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடி, மிசோரமுக்கு ரூ.22.80 கோடி, கேரளாவுக்கு ரூ.153.20 கோடி மற்றும் உத்தராகண்டிற்கு ரூ.455.60 கோடி மத்திய அரசின் பங்காக வழங்கப்படுகிறது.