
30th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னையில் மின்சாரப் பேருந்து சேவையை தொடக்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
- டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
- சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- அதன் ஒரு பகுதியாக, சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் பணிகள் முடிவடைந்தன.
- இந்நிலையில் சென்னை வியாசர்பாடியில் இருந்து 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
- பின்னர் முதல்வர் ஸ்டாலின், பேருந்தில் ஏறி பேருந்தின் சிறப்பம்சங்களைக் கேட்டறிந்தார். 7 சிசிடிவி கேமரா, சீட் பெல்ட், சார்ஜிங் பாய்ண்ட் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜூன் 30 அன்று வெளியான மத்திய அரசு தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, அதற்கும் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 9.4 சதவீதம் அதிகமாகும். இதன்மூலம் கடந்த ஐந்தே ஆண்டுகளில் ஜிஎஸ்டி வசூல் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், 2021-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 11.37 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடும் போது கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.
- 2024-25 நிதியாண்டில் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டின் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியாகவும், 2022-ஆம் நிதியாண்டில் ரூ. 1.51 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரிதாரர்கள் எண்ணிக்கையும் கடந்த 2017-இல் 65 லட்சம் என்ற அளவிலிருந்து 1.51 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி கடந்த 8 ஆண்டு காலத்துக்குள் நிகழ்ந்துள்ளது.
- உற்பத்தி, சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளின் மோசமான செயல்திறன் காரணமாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
- தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் அடிப்படையில் அளவிடப்படும் தொழிற்சாலை உற்பத்தி, மே 2024ல் 6.3 சதவிகிதம் அதிகரித்திருந்தது.
- உற்பத்தித் துறையில், உற்பத்தி வளர்ச்சி மே 2025ல் 2.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாக தரவு சுட்டி காட்டுகிறது. இது கடந்த ஆண்டு 5.1 சதவிகிதமாக இருந்தது.
- சுரங்க உற்பத்தி ஒரு வருடத்திற்கு முன்பு 6.6 சதவிகித வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது. 2025 மே மாதத்தில் மின் உற்பத்தி 5.5 சதவிகிதம் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 13.7 சதவிகிதமாக இருந்தது.
- 2026 நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையான காலகட்டத்தில், தொழில்துறை உற்பத்தி 1.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 5.7 சதவிகிதமாக இருந்தது.