
2nd JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோவுக்கு தமிழக அரசு ஒப்புதல்
- பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் கடந்தாண்டு சமர்பிக்கப்பட்டது.
- இந்த வழித்தடம் தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
- முதல்கட்டமாக பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமையவுள்ளது. ரூ. 8,779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மே மாத சரக்கு சேவை வரி வசூல் ரூ.2 லட்சம் கோடி
- கடந்த 2017 ஜூலை 1 ஆம் தேதி சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலானது.
- கடந்த ஆண்டு மே மாதம் ரூ.1.72 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.4 சதவீதம் உயர்ந்து ரூ.2.01 லட்சம் கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைத்த மூன்றாவது அதிகபட்ச வருவாய் இதுவாகும்.
- மே மாத மத்திய ஜிஎஸ்டி ரூ.35,434 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,902 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.1.09 லட்சம் கோடி, கூடுதல் வரி ரூ.12,879 கோடி என மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி வசூலானது.
- 2025 மே மாதத்தில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் வாயிலான ஜிஎஸ்டி 13.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதிகள் வாயிலான ஜிஎஸ்டி 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியும் வசூலாகியுள்ளது.
- இம்மாதம் திருப்பியளிக்கப்பட்ட தொகை ரூ.27,210 கோடி. முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.
- மகாராஷ்டிரம், தமிழகம், மேற்கு வங்கம், கா்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் 17 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.