
28th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
RAW உளவு அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமனம்
- இந்தியாவின் 'Secretary of the Research and Analysis Wing' என்றழைக்கப்படும் 'RAW' உளவு அமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் இந்த மாதம் ஜூலை 30-ம் தேதியோடு நிறைவடைகிறது.
- இதையடுத்து இதன் தலைவராக பராக் ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1989-ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் (IPS) பஞ்சாப் கேடரில் பணியாற்றியவர்.
- காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தான் - இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றியவர்.
- உஸ்பெகிஸ்தானில் நேற்று நடந்த கடைசி சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ்வை, பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம், சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றினார்.
- இந்த வெற்றியை தொடர்ந்து, உலக செஸ் தர வரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா 4வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இப்பட்டியலில், மேக்னஸ் கார்ல்சன் முதலிடத்திலும், ஹிகாரு நகமுரா, பேபியானோ கரவுனா ஆகியோர், 2 மற்றும் 3வது இடங்களிலும் உள்ளனர்.