
26th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர்
- புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இந்திய நேரப்படி 12:01-க்கு ஏவப்பட்ட 'ஆக்சியம் 4' திட்டத்தின் டிராகன் விண்கலம், தனது 28 மணி நேர பயணத்தை நிறைவு செய்து இன்று இந்திய நேரப்படி மாலை 4:01 மணியளவில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து 424 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
- நாசாவின் நேரடி வீடியோ இணைப்பு, டிராகன் விண்கலமானது விண்வெளி நிலையத்தை நெருங்குவதைக் காட்டியது மற்றும் டாக்கிங் (docking) பணி மாலை 4:15 மணிக்கு நிறைவடைந்தது.
- டிராகன் விண்கலம் தரையிறங்கியவுடன், இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
- கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தில் எட்டு விரைவு ரோந்து கப்பல்கள் கட்டும் திட்டத்தின் கீழ் முதலாவது விரைவு ரோந்து கப்பலான ‘ஆதம்யா’ இன்று (ஜூன் 26ம் தேதி) கோவாவில் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது.
- விரைவு ரோந்து கப்பல்கள் என்பவை கடலோரக் காவல் படையில் உள்ள கப்பல்களில் பிட்ச் ப்ரொப்பல்லர்கள் மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கியர்பாக்ஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாவது வகை கப்பல்கள் ஆகும்.
- இதன் சிறந்த சூழற்சித்திறன், செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மை ஆகியவை கடற்பகுதி கண்காணிப்புப் பணியில் மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது.
- இந்த கப்பலில் 30 மிமீ அளவிலான சிஆர்என்-91 ரக துப்பாக்கி, தீ கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றுடன் கூடிய இரண்டு 12.7 மிமீ நிலைப்படுத்தப்பட்ட தொலைக்கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய துப்பாக்கிகள், ஒருங்கிணைந்த பாலம் அமைப்பு, ஒருங்கிணைந்த தள மேலாண்மை அமைப்பு, தானியங்கி மின் மேலாண்மை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- இந்த மேம்பட்ட அமைப்புகள், இந்தியாவின் விரிவான கடல்சார் பாதுகாப்புப் பணிகளில் அதிக செயல்திறன் மற்றும் எதிர் தாக்குதல் நடத்துவதற்கான வலிமையையும் கொண்டுள்ளன.
- யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 21-வது வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று (26.06.2025) டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.
- யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், கள வல்லுநர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
- சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன், யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும், நாட்டில் யானைகளின் பாதுகாப்புக்கான வழிகள் குறித்து ஆலோசிக்கவும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
- மனித பாதுகாப்புக்கும் யானைகள் பாதுகாப்பிற்கும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவாலாக உள்ள மனித - யானை மோதல் சம்பவங்களைத் தடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.