
25th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் ரூ.417 கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொகுப்பு அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல்
- உத்தரப் பிரதேசத்தின் கௌதம புத்தா நகரில் ரூ.417 கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொகுப்பு (EMC 2.0) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது உள்ளூர் உற்பத்தி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு. இதை அங்கீகரித்து, திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அங்கீகரிக்கப்பட்ட மின்னணு உற்பத்தி தொகுப்பு 2.0 திட்டம் யமுனா விரைவுச்சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தால் உருவாக்கப்படும். இந்த தொகுப்பு 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, ரூ.2,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக தடகள கான்டினென்டல் டூர் பிரிவு ஏ-வில் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்கில் தங்கம் வென்றார். மொத்தம் 9 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே நீரஜ் சோப்ரா ஆதிக்கம் செலுத்தினார்.
- நீரஜ் சோப்ரா தனது சிறந்த நிலையான 90.23 மீட்டரை எட்டத் தவறிய போதிலும், 85.29 மீட்டருக்கு ஈட்டி எறிந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தைத் தனதாக்கினார்.
- தென்னாப்பிரிக்காவின் டவ் ஸ்மிட் 84.12 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இரண்டு முறை உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 83.63 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
- 1974-ம் ஆண்டு நவநிர்மாண் இயக்கம், சம்பூர்ண கிராந்தி இயக்கம் ஆகியவற்றுக்கும் தடை விதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
- இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, பின்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பல இன்னல்களை சந்தித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
- அவசரநிலை பிகரடனத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான அவர்களது துணிச்சலுக்கும் எதிர்ப்புக்கும் மத்திய அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது.
- 2025-ம் ஆண்டு, இந்திய வரலாற்றில் அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, குடியரசு மற்றும் ஜனநாயக உணர்வு சிதைக்கப்பட்டும், கூட்டாட்சித் தத்துவம் சீர்குலைக்கப்பட்டதற்கும், அடிப்படை உரிமைகள், மனித சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட மறக்க முடியாத அத்தியாயமாகும். இது அரசியலமைப்பு படுகொலை தினத்தின் 50 ஆண்டுகளைக் குறிப்பதாக உள்ளது.
- மக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளின் நெகிழ்வுத் தன்மை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சரவை மீண்டும் தெரிவித்துள்ளது.
- உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் தெற்காசிய பிராந்திய மையத்தை அமைக்க வேண்டும் என்ற வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உற்பத்தித்திறன், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரித்தல் ஆகியவை இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
- இந்தியாவில் உள்ள உருளைக்கிழங்கு தொழில் பிரிவானது உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கேஜிங், போக்குவரத்து, சந்தைப்படுத்தல், மதிப்புச் சங்கிலி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, புனே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-வது கட்டமாக வனாஸ் - சந்தானி சௌக் (வழித்தடம் 2ஏ), ராம்வாடி – வாகோலி / விட்டல்வாடி (வழித்தடம் 2பி) ஆகியவற்றுக்கும் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போதுள்ள வனாஸ் - ராம்வாடி வழித்தடத்தின் நீட்டிப்புப் பணிகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த இரண்டு உயர்மட்ட வழித்தடங்களும் 12.75 கி.மீ நீளமும் 13 நிலையங்களையும் உள்ளடக்கியது. சந்தானி சௌக், பவ்தான், கோத்ருட், காரடி, வாகோலி போன்ற விரைவான முன்னேற்றம் கண்டு வரும் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப் பணிகளை நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- இதற்கான திட்ட செலவு ரூ.3626.24 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளன.
- இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணி தற்போதுள்ள 2-வது வழித்தடத்தின் நீட்டிப்பாகும். மேலும் புனேயில் கிழக்கு-மேற்கு இடையே மக்களின் ரயில் பயணத்தை மேம்படுத்தும் வகையில் சந்தானி சௌக் - வாகோலி வரையிலான விரிவாக்கத் திட்டமும் அடங்கும்.
- ஜாரியா நிலக்கரி சுரங்கத்தில் தீ, மண் சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வு தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட ஜாரியா பெருந்திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- திருத்தப்பட்ட திட்டத்தை அமலாக்க ரூ.5,940.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- மறு குடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்கள் பொருளாதார ரீதியில் தற்சார்பு பெறுவதை உறுதி செய்ய திறன் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ளவும் வருவாய் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும், மறு குடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளில் சாலைகள், மின்சாரம், குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல், பள்ளிகள், மருத்துவமனைகள், திறன் மேம்பாட்டு மையங்கள், சமூக கூடங்கள் நிறுவுதல் போன்ற உள்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். திருத்தியமைக்கப்பட்ட ஜாரியா பெருந்திட்ட அமலாக்க குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இவை செயல்படுத்தப்படும்.