Type Here to Get Search Results !

18th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


18th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னை மாநகரில் கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.6.04 கோடியில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.
  • சென்னை மெரீனா கடற்கரையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்ததுடன், அங்கிருந்தபடியே மாநகரின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் செயல்பாட்டையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் ப்ரியா, அரசு அதிகாரிகள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்கள் நியமனம்
  • தமிழ்நாடு தகவல் ஆணையம் சென்னையில் உள்ள நந்தனத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2வது மேல்முறையீடு மீதான மனு மற்றும் புகாரை விசாரிக்கும் அமைப்பாக உள்ளது.
  • ஆரம்பத்தில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 மாநில தகவல் ஆணையர்களைக் கொண்டு தமிழ்நாடு தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது.
  • அதன் பின்னர் மாநில தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 2இல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான எம்.டி. ஷகீல் அக்தர் தலைமை தகவல் ஆணையராகச் செயல்பட்டு வருகிறார். 
  • மேலும் தாமரைக்கண்ணன், பிரியாகுமார், திருமலை முத்து மற்றும் செல்வராஜ் ஆகிய 4 பேர் தகவல் ஆணையர்களாகப் பதவி வகித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இரு தகவல் ஆணையர்களுக்கான பதவியிடங்கள் காலியாக இருந்து வந்தன.
  • இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு ஆணையர்களுக்கான பதவி இடங்களுக்கு வழக்கறிஞர்கள் வி.பி.ஆர். இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் (கர்நாடகா வழக்கறிஞர்) ஆகியோரை மாநில தகவல் ஆணையர்களாக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 
  • தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.ஆர். இளம்பரிதி அரசின் கூடுதல் வழக்கறிஞராக இருந்தவர் என்றும், எம். நடேசன் கர்நாடகா வழக்கறிஞராக இருந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
இமாச்சலப்பிரதேசத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ. 2006 கோடி வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஒப்புதல்
  • இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நிதி தொகுப்பிலிருந்து அம்மாநிலத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கான பரிந்துரையை அளித்தது.
  • 2023-ம் ஆண்டு பருவமழையின் போது வெள்ளம், பெருமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ஏற்பட்ட சேதம் மற்றும் பேரழிவு காரணமாக மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலத்திற்கு உதவும் வகையில், இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.2006.40 கோடி மீட்புத் திட்டத்தை உயர்மட்டக் குழு அங்கீகரித்துள்ளது. 
  • இதில், ரூ.1504.80 கோடி தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நிதி தொகுப்பிலிருந்து மத்திய அரசின் பங்களிப்பாக வழங்கப்படும்.
  • முன்னதாக, 2023 டிசம்பர் 12, அன்று, இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.633.73 கோடி கூடுதல் நிதி உதவி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
  • 2024-25-ம் நிதியாண்டில், மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியையும், தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியையும் மத்திய அரசு  விடுவித்துள்ளது. 
  • அத்துடன், 19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ.4984.25 கோடியையும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் குறைப்பு நிதியிலிருந்து ரூ.719.72 கோடியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது.
2025 - 2026ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% என கணிப்பு
  • முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான (ஐ.சி.ஆர்.ஏ.) அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
  • அதே வேளையில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சியும் 6.4 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறையும்.
  • பணவீக்கத்தைப் பொறுத்தவரை, நுகர்வோர் விலைக் குறியீடு 3.5 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மொத்த விலைக் குறியீடு நடப்பு நிதியாண்டில் 1.8 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
  • 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதமாக இருக்கும் என்று ஐ.சி.ஆர்.ஏ. கணித்துள்ளது. அதே காலகட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.2 சதவிகிதம் முதல் 1.3 சதவிகிதம் வரை இருக்கும் என்றுது.
  • 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கணிசமான வருமான வரி நிவாரணம், வட்டி விகிதக் குறைப்புக்கள், இ.எம்.ஐ. மற்றும் உணவுப் பணவீக்கம் குறைந்து, வீட்டு உபயோக வருமானம் அதிகரிக்கும். அதே வேளையில் ஏற்றுமதியில் மந்தநிலை குறுகிய காலத்தில் தொடரும்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பாஷினி தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மொழி மொழிபெயர்ப்பு இயக்கமான பாஷினியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது.  
  • இதன் மூலம், பஞ்சாயத்து ராஜ் நிர்வாகத்தில் கூடுதல் உள்ளடக்கிய தன்மையும், அதிநவீன மொழி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் ஏற்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை  (2025 ஜூன் 19) புதுதில்லியில் கையெழுத்தாகவுள்ளது. 
  • இந்த நிகழ்வில் பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல், அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
  • இந்த முயற்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் டிஜிட்டல் தளங்களிலும் வெளிநடவடிக்கைகளிலும் பன்மொழி அணுகலை விரிவுபடுத்துவதற்கான ஒரு ஒத்துழைப்பாகும். 
  • இது மேம்பட்ட மொழிபெயர்ப்பு தொழில்நுட்பங்கள் மூலம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முன்முயற்சிகள், திட்டங்கள், ஆகியவற்றை பரந்த அளவில் கொண்டு சேர்க்கும். இது அமைச்சகத்தின் தளங்களை தடையின்றி பன்மொழிகளில் மாற்றுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாகும். 
  • இதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர், குறிப்பாக கிராமப்புறங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் தங்கள் தாய்மொழிகளில் நிர்வாக அமைப்புகளை அணுக முடியும்.
ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை
  • கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் வெளிநடவடிக்கை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். 'மாறிவரும் உலகில் எரிசக்தி பாதுகாப்பு: பன்முகத்தன்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜி7-ன் 50 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel