Type Here to Get Search Results !

17th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


17th JUNE 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு
  • தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய கே.சுரேந்தரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. 
  • இதை ஏற்று, அவரை இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், நீதிபதி சுரேந்தருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • நீதிபதி சுரேந்தர் பதவியேற்றதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. 16 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரனதிக்கு வெண்கலம்
  • தென் கொரியாவில் பெண்களுக்கான ஆர்ட்டிஸ்ட் ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடந்தது. வால்ட் பிரிவில் இந்தியாவின் பிரனதி நாயக்(30) பங்கேற்றார். பைனலில் 13.466 புள்ளி பெற்ற பிரனதி, 3 இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். 
  • சீனாவின் ஜங் இஹான் (13.650), வியட்நாமின் நிகுயேன் தி (13.583) முறையே தங்கம், வெள்ளி வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை புரோதிஸ்தா சமந்தா, 13.016 புள்ளி எடுத்து 4வது இடம் பிடித்தார்.
  • ஆர்ட்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பிரனதி வென்ற 3வது பதக்கம் இதுவாகும். முன்னதாக 2019ல் உல்லன்பட்டர், 2022ல் தோஹா போட்டியில் பிரனதி இரண்டு வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel