
9th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
- திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 408 கோடியில் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
- திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகனம் முனையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய காய்கறி அங்காடிக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
- திருச்சி மாவட்டத்தில் இன்று ரூ.2,343.90 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
- பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முதல்வர் திறந்து வைத்து உரையாற்றினார் ஸ்டாலின். திருச்சியில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
- மின் தூக்கி, நகரும் படிகட்டு, ஏசி அறைகள் என பல்வேறு வசதிகளுடன் பஞ்சப்பூர் பேருந்து முனையம் ரூ.408.36 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா - பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு முதல் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- இந்திய எல்லைப் பகுதி நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் முப்படைத் தளபதிகளையும் இன்று சந்தித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
- இந்த நிலையில், ராணுவத் தளபதி உபேந்திர துவிவேதிக்கு கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- ”1948 ராணுவ விதி 33-இன் கீழ் ராணுவத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள 32 படைகளில் 14 படைகளின் வீரர்களை எல்லைக்கு மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- ராணுவத்துக்கு பணியாளர்கள் சேர்க்கவும், நிதி ஒதுக்கீட்டுக்கான அதிகாரமும் பிப். 9, 2028 வரை 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.