
4th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதல் தேசிய மத்தியஸ்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்
- குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மே 3, 2025) புது தில்லியில் இந்திய மத்தியஸ்த சங்கத்தைத் தொடங்கி வைத்து, முதல் தேசிய மத்தியஸ்த மாநாடு 2025-ல் உரையாற்றினார்.
- மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2025 மே 4 முதல் 7 வரை இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB -ஏடிபி) ஆளுநர்கள் குழுவின் 58-வது ஆண்டு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
- அவர் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையைச் சேர்ந்த இந்திய அதிகாரிகள் குழுவிற்கு தலைமை வகித்து இதில் பங்கேற்கிறார்.
- இந்தக் கூட்டங்களில் ஏடிபி ஆளுநர்கள் குழுவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள், ஏடிபி உறுப்பினர்கள், சர்வதேச நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
- ஆளுநர்களின் வணிக செயல்பாட்டு அமர்வு, ஆளுநர்களின் முழுமையான அமர்வு, எதிர்கால நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கு ஆகியவற்றில் மத்திய நிதியமைச்சர் பங்கேற்பார்.
- ஏடிபி-யின் 58-வது ஆண்டு கூட்டத்தின் ஒரு பகுதியாக, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இத்தாலி, ஜப்பான், பூட்டான் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
- ஏடிபி தலைவர், சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியத்தின் தலைவர், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியின் ஆளுநர் ஆகியோரையும் அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.
- மத்திய நிதியமைச்சர் , மிலனில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுவார். உலகளாவிய சிந்தனையாளர்கள், வணிகத் தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் அவர் சந்திப்பார்.
- "பொருளாதாரத்தையும் பருவநிலை மீள்தன்மையையும் சமநிலைப்படுத்துதல்" என்ற தலைப்பில் போக்கோனி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒரு அமர்விலும் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பார்.