31st MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சட்னா மற்றும் தாதியா விமான நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்
- பிராந்திய போக்குவரத்துக்கான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சட்னா விமான நிலையத்தையும் மேம்படுத்தப்பட்ட தாதியா விமான நிலையத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- புந்தேல்கண்ட் மற்றும் பகேல்கண்ட் பிராந்தியங்களில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, இரு விமான நிலையங்களிலும் நடைபெற்ற நேரடி நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டது.
- உடான் திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விமானப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவதற்கான மத்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டைக் குறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025
- தென் கொரியாவின் குமியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025-ஐ இந்தியா 24 பதக்கங்களுடன் (8 தங்கம், 10 வெள்ளி மற்றும் 6 வெண்கலம்) முடித்தது.
- இதன் மூலம், சீனாவுக்குப் பின்னால் இந்தியா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. கணிசமான பதக்கங்களை வென்றதோடு மட்டுமல்லாமல், குமியில் இந்தியாவின் அனிமேஷ் குஜூர் (ஆண்கள் 200 மீட்டர்) மற்றும் பருல் சவுத்ரி (பெண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ்) ஆகிய இரண்டு தேசிய சாதனைகளும் படைத்தனர்.
- ஆண்கள் 20 கிமீ பந்தய நடைப்பயணம் - சர்வின் செபாஸ்டியன் (வெண்கலம்)
- ஆண்கள் 10,000 மீ - குல்வீர் சிங் (தங்கம்)
- பெண்கள் 400 மீ - ரூபால் சவுத்ரி (வெள்ளி)
- ஆண்கள் 1500 மீ - யூனஸ் ஷா (வெண்கலம்)
- பெண்கள் 1500 மீ - பூஜா (வெள்ளி)
- டெகத்லான் - தேஜஸ்வின் சங்கர் (வெள்ளி)
- ஆண்கள் டிரிபிள் ஜம்ப் - பிரவீன் சித்ரவேல் (வெள்ளி)
- கலப்பு 4x400 மீ ரிலே - தங்கம்
- ஆண்கள் 3000 மீ ஸ்டீப்பிள்சேஸ் - அவினாஷ் சேபிள் (தங்கம்)
- பெண்கள் 100 மீ தடை தாண்டுதல் - ஜோதி யர்ராஜி (தங்கம்)
- பெண்கள் 4x400 மீ ரிலே - தங்கம்
- ஆண்கள் 4x400 மீ ரிலே - வெள்ளி
- பெண்கள் நீளம் தாண்டுதல் - ஆன்சி சோஜன் (வெள்ளி)
- பெண்கள் நீளம் தாண்டுதல் - ஷைலி சிங் (வெண்கலம்)
- ஆண்கள் 5000 மீ - குல்வீர் சிங் (தங்கம்)
- பெண்கள் 3000 மீ ஸ்டீபிள்சேஸ் - பருல் சவுத்ரி (வெள்ளி, தேசிய சாதனையுடன்)
- பெண்கள் உயரம் தாண்டுதல் - பூஜா (தங்கம்)
- ஹெப்டத்லான் - நந்தினி அகசாரா (தங்கம்)
- ஆண்கள் 200 மீ - அனிமேஷ் குஜூர் (வெண்கலம், தேசிய சாதனையுடன்)
- பெண்கள் 400 மீ தடை தாண்டுதல் - வித்யா ராம்ராஜ் (வெண்கலம்)
- ஆண்கள் ஈட்டி எறிதல் - சச்சின் யாதவ் (வெள்ளி)
- பெண்கள் 5000 மீ - பருல் சவுத்ரி (வெள்ளி)
- பெண்கள் 800 மீ - பூஜா (வெண்கலம்)
- பெண்கள் 4x100 மீ ரிலே - வெள்ளி