SACHET செயலி / SACHET APP: பேரிடர் பாதிப்பு குறித்த முன்னறிவுப்புகளை இந்த செயலி வழங்கும். இந்த தகவல் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது.
இதோடு வானிலை சார்ந்த அறிவிப்புகளை இந்திய வானிலை மையத்தின் துணையோடு இந்த செயலியில் பயனர்கள் பெற முடியும். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும்.
(தமிழில் நாம் பயன்படுத்தி பார்த்தபோது அது அப்படியே ஆங்கிலத்தில் இருந்து நேராக இணையம் மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது போல இருந்தது. ஹோம் பேஜ் என்பது தமிழில் 'வீடு' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அது முகப்பு என்று இருக்க வேண்டும்). இதில் அவசர கால உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டில் இந்த செயலி வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு 8 மற்றும் அதற்கடுத்த ஆண்ட்ராய்டு பதிப்புகளில் இந்த செயலியை பயனர்களை பயன்படுத்த முடியும்.
கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆப்பிள் ஐபோன்களிலும் இந்த செயலியை பயன்படுத்த முடியும்
ENGLISH
SACHET APP: This app provides disaster alerts. This information is provided by the government. In addition, users can get weather-related notifications on this app with the help of the India Meteorological Department. This app can be used in 12 languages, including Tamil.
Emergency help numbers are also provided in this. This app was released in the year 2023. Users can use this app on Android 8 and later Android versions. More than 5 lakh people have downloaded it on the Google Play Store alone. This app can also be used on Apple iPhones.