
5th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்டது தமிழ்நாடு
- 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவிகித உண்மை வளர்ச்சி விகிதத்துடன் நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும். 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும்.
- 2023-24 ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி), 2024-25 ஆம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
- இதற்கு முன் 2017-18 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதம் 8.59 சதவிகிதம் பதிவாகியுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் குறைந்தபட்சமாக 0.07 சதவிகிதம் எனப் பதிவாகியது.
- இக்காலகட்டத்தில் பல மாநிலங்கள் எதிர்மறை வளர்ச்சியினைக் கொண்டிருந்த நிலையில், தமிழ்நாடு குறைந்தபட்சம் நேர்மறை வளர்ச்சியினைக் கொண்டிருந்தது.
- 2024-25 ஆம் ஆண்டு தமிழ்நாடு 14.02 சதவிகிதம் பெயரளவு வளர்ச்சி வீதத்தினைப் பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
- நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு இயற்கைப் பேரழிவுகளை எதிர்கொண்ட பிஹார், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன் தோளோடு தோள் நிற்கிறது.
- மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு 2024-ஆம் ஆண்டில் திடீர் வெள்ளம், பலத்த மழை, நிலச்சரிவுகள், சூறாவளி புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிஹார், ஹிமாச்சலப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1280.35 கோடி கூடுதல் நிதி உதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- திடீர் வெள்ளம், பலத்த மழை, நிலச்சரிவு, சூறாவளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிஹாருக்கு ரூ.588.73 கோடியும், ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழகத்துக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- 2024-25 நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
- தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மூன்று மாநிலங்களுக்கு ரூ.1247.29 கோடி மத்திய உதவியாக வழங்க உயர்மட்ட பொறுப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது மாநில பேரிடர் நிவாரண நிதியில் உள்ள ஆண்டிற்கான தொடக்க இருப்பில் 50 சதவீதமும், ஒரு யூனியன் பிரதேசத்திற்கு ரூ.33.06 கோடியும் சரி செய்யப்படும்.
- இந்தக் கூடுதல் உதவி, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் வசம் ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் யூனியன் பிரதேச பேரிடர் நிவாரண நிதியில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதிக்கு கூடுதல் ஆகும்.
- 2024-25 நிதியாண்டில், மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியையும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியையும் விடுவித்துள்ளது.
- மேலும், மாநில பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து 19 மாநிலங்களுக்கு ரூ.4984.25 கோடியும், தேசிய பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து 8 மாநிலங்களுக்கு ரூ.719.72 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
- பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, நேற்று இலங்கை சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தொடர்ந்து, அந்நாட்டு அதிபரின் செயலகத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- தொடர்ந்து இரு தரப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் நிலையிலான உயர்நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிலையில், அதன் இறுதியாக, இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எண்மமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- அர்ஜென்டீனாவில் நடைபெறும் சா்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பையில் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா 50மீ 3 பொசிஷன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- 23 வயதாகும் சிஃப்ட் கௌர் சர்மா தனது முதல் தங்கத்தை வென்றுள்ளார்.
- ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
- 3 பொசிஷன்களிலும் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலில் 458.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா.
- 2ஆவது, 3ஆவது இடங்கள் முறையே ஜெர்மனி, கஜகஸ்தானைச் சேர்ந்த வீராங்கனைகள் அனிதா மன்கோல்ட், அரினா அல்டுகோவா பெற்றார்கள்.
- கஜகஸ்தானைச் சேர்ந்த அரினா அல்டுகோவா ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவர் என்பது கவனிக்கத்தக்கது.
- ஆண்கள் பிரிவில் 50 மீ. துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சைன் சிங் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- பாங்காக் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்து நேற்று இரவு இலங்கை சென்றார். இலங்கையில், அந்நாட்டு அதிபருடன் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
- இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்துள்ளார்.
- விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர், திருக்குறள் சொல்லி தனது நன்றியை தெரிவித்தார்.
- அதாவது, செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பிரதமர் மோடி கூறினார்.