
30th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றம்
- பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
- பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நடந்து முடிந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
- இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் அலோக் ஜோஷி; ஆலோசனை குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
- இப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். கடந்த 16-ஆம் தேதி உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தாா்.
- பி.ஆா். கவாய் வரும் டிசம்பா் 23-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை இப்பதவியை வகிப்பாா். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65.
- மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த கவாய், கடந்த 1985-இல் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா்.
- மும்பை உயா்நீதிமன்றத்தின் நாகபுரி கிளையில் கடந்த 1992-1993 காலகட்டத்தில் அரசுத் தரப்பு உதவி வழக்குரைஞராகப் பணியாற்றிய இவா், 2000-இல் அரசுத் தரப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டாா்.
- கடந்த 2003-இல் மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2005-இல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றாா். 2019, மே 24-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிக் கணக்கெடுப்பையும் சேர்க்க முடிவு செய்துள்ளது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246 ஆவது பிரிவின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் மத்தியப் பட்டியலில் 69 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
- கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்திற்கான (அக்டோபர்-செப்டம்பர்) கரும்பு பயிருக்கு உரிய நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு ரூ.355/- வீதம் 10.25% அடிப்படை மீட்பு விகிதத்திற்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- இது 10.25%க்கு அதிகமாக உள்ள ஒவ்வொரு 0.1% -க்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை வழங்குகிறது. இந்த விகிதத்திற்கு குறைவாக உள்ள மீட்பில் ஒவ்வொரு 0.1%-க்கும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3.46 பிரீமியம் தொகை குறைக்கப்படுகிறது.
- இருப்பினும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், 9.5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கும் அளிக்கப்படுவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- அத்தகைய விவசாயிகளுக்கு வரும் 2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்புக்கான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.329.05 கிடைக்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் மேகாலயாவின் (ஷில்லாங்கிற்கு அருகில்) மாவ்லிங்குங் முதல் அசாமின் (சில்சார் அருகே) பஞ்ச்கிராம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண். 06-ல் 166.80 கி.மீ நீளமுள்ள 4 வழி பசுமைவழி அணுகல் பாதையை அரசு-தனியார் பங்களிப்பு முறையில் அதிவேக வழித்தடமாக மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் நிர்வாகம் செய்வதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் மொத்த மூலதனச் செலவு ரூ.22,864 கோடி ஆகும். 166.80 கி.மீ. திட்ட நீளப்பாதையில் மேகாலயாவில் 144.80 கி.மீ. மற்றும் அசாமில் 22.00 கி.மீ. உள்ளது.