
2nd APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேறியது
- இந்திய மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவு 1974-ம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது.
- இதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண, கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு.
- இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 4-வது முறையாக கச்சத்தீவு மீட்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
- கருணாநிதி முதல்வராக இருந்த ஒரு முறையும்,, ஜெயலலிதா முதல்வராக இருந்த இரு முறையும் கச்சத்தீவு மீட்பு தீர்மானங்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
- தற்போது 4-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டம் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முதலீட்டு சூழலை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- இந்த நிலையில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனமான JICA தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்காக ரூ. 2,106 கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்தின் 3ம் கட்டம் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப நிலையான, எதிர்காலம் சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் வளர்ந்து வரும் பசுமைத் துறைகளில் கவனம் செலுத்துவதாக உள்ளதாகவும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் பல அரியவகை தொல்பொருள்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 2.04 மீட்டர் ஆழத்தில் 'தங்கத்தால் செய்யப்பட்ட மணி' ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த மணி, 6 மி.மீ சுற்றளவும், 4.7 மி.மீ கணமும், 22 மி.கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் வரித்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த வரி வசூலானது 10% அதிகரித்துள்ளதாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்த வரி அதிகரிப்பு இந்தியாவில் உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.