
28th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் மார்ச் 2025
- மார்ச் 2025 மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறியீட்டு எண் வளர்ச்சி cuவிகிதம் 3.0 சதவீதமாகும். இது 2025 பிப்ரவரி மாதத்தில் 2.9 சதவீதமாக (விரைவான மதிப்பீடு) இருந்தது.
- சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 0.4 சதவீதம், 3.0 சதவீதம் மற்றும் 6.3 சதவீதமாகும்.
- தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணின் விரைவான மதிப்பீடுகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 160.0- ஆக இருந்தது இந்த மார்ச் மாதத்தில் 164.8 ஆக உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி, மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்தி குறியீடுகள் முறையே 156.8, 160.9 மற்றும் 217.1 ஆக உள்ளன.
- உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த 23 தொழில் குழுக்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
- தொழில் குழுக்களில் உள்ள நிறுவனங்களில் "அடிப்படை உலோகங்களின் உற்பத்தி", "எஃகு குழாய்கள், பார்கள் உள்ளிட்ட பல்வேறு வகை உற்பத்தி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
- "மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் உற்பத்தி" என்ற தொழில்துறை குழுவில், "வாகன உதிரிபாகங்கள், லாரிகள் மற்றும் டிரெய்லர்களின் பாகங்கள்" ஆகியவை வளர்ச்சியடைந்துள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, இந்த மாத தொடக்கத்தில் 22 ஒற்றை இருக்கை ரஃபேல் எம் போர் விமானங்கள் மற்றும் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களுக்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- இந்த நிலையில் கடற்படையின் திறன்களை அதிகரிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டுடன் ரூ.63,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இந்தியா இன்று (ஏப்.28) கையெழுத்திட்டுள்ளது.
- அதன்படி நாட்டின் முதல் விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்திற்காக 26 ரஃபேல் மரைன் விமானங்களை வாங்குவதற்காக இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் இந்த 26 விமானங்களும் ஒப்படைக்கப்படவுள்ளன.
- பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த இந்த விமானங்கள் பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 டன் ரக விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து இயக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.