
24th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம்
- இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் இணைந்து, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசினர்.
- இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். "தமிழ்நாட்டில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் கல்வித் துறையில் உயர்ந்து நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதற்குக் காரணமானவர்களில் ஒருவர் கருணாநிதி.
- கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ள பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்துள்ள, பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிய கருணாநிதி பெயரில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்" என்று அறிவித்துள்ளார்.
- தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு பீகார் மாநிலம் மதுபானியில் இன்று ரூ.13,480 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹத்துவா என்ற இடத்தில் சமையல் எரிவாயுவை சிலிண்டரில் அடைக்கும் ரூ.340 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
- இந்த பிராந்தியத்தில் மின்சார உள்கட்டமைப்பை அதிகரிக்க ரூ.1170 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
- நாடு முழுவதும் பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 10 லட்சம் பயனாளிகளுக்கு தவணைத் தொகையை விடுவித்த பிரதமர் 15 லட்சம் புதிய பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை ஒப்படைத்தார்.
- மேலும், இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு புதுமனை புகுவிழாவை குறிக்கும் வகையில் வீட்டு சாவிகளை ஒப்படைத்தார்.
- இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சூரத்தின் மூலம் நடத்தப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையின் சோதனையானது வெற்றியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஏவுகணையானது சுமார் 70 கி.மீ. தூரம் வரையில் பாய்ந்து அதன் இலக்கை தாக்கக் கூடிய திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.