மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2025 / HAPPIEST COUNTRIES IN WORLD 2025
TNPSCSHOUTERSApril 18, 2025
0
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் 2025 / HAPPIEST COUNTRIES IN WORLD 2025: ஒவ்வொரு ஆண்டும் ஹேப்பியான நாடுகளின் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் சர்வே மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இப்போது Ipsos Group என்ற நிறுவனம் புதிய சர்வேயை மேற்கொண்டது.
Ipsos Group நிறுவனம் என்பது பிரான்ஸ் தலைநகர் பாரீசை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மார்க்கெட்டிங் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் சார்பில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 20ம் தேதி முதல் 2025 ஜனவரி மாதம் 3ம் தேதி வரை மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 75 வயதுக்கு உட்பட்டவர்களிடம் சர்வே மேற்கொள்ளப்பட்டது.
இந்த சர்வேயில் மொத்தம் 23 ஆயிரத்து 765 பேர் பங்கேற்றனர். இந்த சர்வே முடிவு என்பது Ipsos Global Happiness Index 2025 என்ற பெயரில் தற்போது வெளியாகி உள்ளது.
அதில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா தான் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இந்தியா 88 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.
அதாவது சர்வேயில் பங்கேற்றவர்களல் 51 சதவீதம் பேர் மிக மகிழ்ச்சியாகவும் (Very Happy) இருப்பதாகவும், 37 சதவீதம் பேர் ரொம்ப மகிழ்ச்சியாக (Rather Happy) இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் 8 சதவீதம் பேர் மிகவும் மகிழ்ச்சியாக இல்லை (Not Very Happy) என்றும் 4 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை (Not happy at all)என்றும் கூறியுள்ளனர்.
இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. 3வது இடத்தில் மெக்சிகோ, 4வது இடத்தில் இந்தோனேசியா, 5வது இடத்தில் பிரேசில், 6வது இடத்தில் தாய்லாந்து, 7 வது இடத்தில் நியூசிலாந்து, 8 வது இடத்தில் கொலம்பியா, 9 வது - 10வது இடத்தில் முறைகே மலேசியா அயர்லாந்து நாடுகள் உள்ளனர்.
11வது இடத்தில் சிலி, 12வது இடத்தில் அர்ஜென்டினா, 13வது இடத்தில் சிங்கப்பூர் 14வது இடத்தில் ஸ்வீடன், 15வது இடத்தில் பிரான்ஸ் நாடுகள் உள்ளன.
16வது இடத்தில் பெல்ஜியம், 17 வது இடத்தில் ஸ்பெயின், 18 வது இடத்தில் போலந்து, 19 வது இடத்தில் ஆஸ்திரேலியா, 20வது இடத்தில் பிரிட்டன், 21வது இடத்தில் அமெரிக்கா உள்ளது.
22வது இடத்தில் கனடா, 23வது இடத்தில் தென்ஆப்பிரிக்கா, 24வது இடத்தில் இத்தாலி, 25வது இடத்தில் பெரு, 26வது இடத்தில் ஜெர்மனி 27 வது இடத்தில் ஜப்பான் 28 வது இடத்தில் தென்கொரியா, 29 வது இடத்தில் துருக்கி, 30வது இடத்தில் ஹங்கேரி நாடுகள் உள்ளன.
ENGLISH
HAPPIEST COUNTRIES IN WORLD 2025: Every year, lists of happy countries are released. In this regard, various companies conduct surveys and publish their results. In this regard, a new survey has been conducted by a company called Ipsos Group.
Ipsos Group is a marketing and research company headquartered in Paris, France. On behalf of this company, a survey was conducted among people under the age of 75 from 30 countries from December 20, 2024 to January 3, 2025.
A total of 23,765 people participated in this survey. The results of this survey have now been released under the name Ipsos Global Happiness Index 2025. India has topped the list of happiest countries. Accordingly, India has topped the list with 88 percent.
That is, 51 percent of the respondents said that they are Very Happy and 37 percent said that they are Rather Happy. Meanwhile, 8 percent said they were Not Very Happy and 4 percent said they were Not happy at all.
The Netherlands is in 2nd place on this list. Mexico is in 3rd place, Indonesia is in 4th place, Brazil is in 5th place, Thailand is in 6th place, New Zealand is in 7th place, Colombia is in 8th place, Malaysia and Ireland are in 9th-10th place.
Chile is in 11th place, Argentina is in 12th place, Singapore is in 13th place, Sweden is in 14th place, and France is in 15th place.
Belgium is in 16th place, Spain is in 17th place, Poland is in 18th place, Australia is in 19th place, Britain is in 20th place, and the United States is in 21st place.
Canada is in 22nd place, South Africa in 23rd place, Italy in 24th place, Peru in 25th place, Germany in 26th place, Japan in 27th place, South Korea in 28th place, Turkey in 29th place, and Hungary in 30th place.