
சிஃபி டெக்னாலஜீஸ் அதிநவீன தரவு மையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
- சிஃபி டெக்னாலஜீஸ் நிறுவனம், ஒருங்கிணைந்த இணையச்சேவை தீர்வுகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், தரவு மைய உள்கட்டமைப்பு, கிளவுட், நெட்வொர்க் சேவைகள் மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும்.
- இந்நிறுவனம், சிப்காட்- சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில், 40 மெகாவாட் மின் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், ஒரு அதிநவீன தரவு மையத்தை நிறுவியுள்ளது.
- முதற்கட்டமாக, இத்திட்டத்தில் 1,882 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 1000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இந்த அதிநவீன தரவு மையத்தை தமிழக முதல்வர் இன்று (ஏப்.17) திறந்து வைத்தார்.
- 2027-ம் ஆண்டிற்குள், சென்னையில், 13,000 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (17.04.2025) மாலை 6 மணியளவில் 20வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
- இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குதல், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடத்திட அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழகத்தில் புதிய தொழில்களில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் போது ரூ.10 ஆயிரம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழில் துறையில் முதலீடு பெறப்படும். தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகள் தொடா்பான அறிவிப்பை பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
- நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இந்த இரண்டு சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
- தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.
- பின்னர், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தச் சட்டமுன்வடிவு மற்றும் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் இரண்டாம் திருத்தச் சட்டமுன்வடிவு ஆகியவற்றை முதல்வர் அறிமுகம் செய்தார்.