
16th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக அரசாணைகள், சுற்றறிக்கை குறிப்புகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
- "தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழைப் பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும்.
- தமிழக அரசாணைகள், சுற்றறிக்கை குறிப்புகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
- பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
- இன்று மாலை சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 10 துணை வேந்தர்கள், 22 பதிவாளர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
- கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய நிதியாண்டுடன்(2023-24) ஒப்பிடுகையில் 5.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
- 2023-24 நிதியாண்டில் பொருட்கள், சேவைகள் என இரண்டின் ஏற்றுமதியும் 778.13 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டில் (2024-25) ஒட்டுமொத்த ஏற்றுமதி 5.50 சதவீதம் அதிகரித்து 820.93 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2024-25-ம் நிதியாண்டில் காபி, மின்னணுப் பொருட்கள், அரிசி, இறைச்சி, பால், தேயிலை, ஜவுளி, மருந்துகள், கனிமங்கள், பொறியியல் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துக் காணப்பட்டது.
- 2023-24-ம் நிதியாண்டில் காபி ஏற்றுமதி 1.29 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 1.81 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது 40.37 சதவீதம் அதிகமாகும்.
- மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 29.12 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 38.58 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து 32.47% உயர்ந்துள்ளது.
- அரிசி ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 10.42 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 19.73% அதிகரித்து 12.47 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
- இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் கோழிப்பண்ணை பொருட்கள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 4.53 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 5.1 பில்லியன் அமெரிக்க டாலராக 12.57% அதிகரித்துள்ளது.
- தேயிலை ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 0.83 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2024-25-ம் நிதியாண்டில் 0.92 பில்லியன் அமெரிக்க டாலராக 11.84% அதிகரித்துள்ளது.
- அனைத்து ஜவுளிகளின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 14.53 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 15.99 பில்லியன் அமெரிக்க டாலராக 10.03% அதிகரித்துள்ளது.
- மருந்துகள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 27.85 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 30.47 பில்லியன் அமெரிக்க டாலராக 9.39% அதிகரித்துள்ளது.
- பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 109.3 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 116.67 பில்லியன் அமெரிக்க டாலராக 6.74% அதிகரித்தது.
- பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி 2023-24-ம் நிதியாண்டில் 3.66 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2024-25-ம் நிதியாண்டில் 3.87 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்து 5.67% உயர்ந்துள்ளது.
- 2025 மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை மொத்த ஏற்றுமதி 73.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது மார்ச் 2024 உடன் ஒப்பிடும்போது 2.65 சதவீத வளர்ச்சியாகும்.
- இந்தியாவில் சில்லறை பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணால் அளவிடப்படுகிறது, இது அன்றாட பொருட்கள், சேவைகளின் விலையை பிரதிபலிக்கிறது. இது 2024-25 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் 4.6% ஆக சரிந்தது. இது 2018-19-க்குப் பிறகு மிகக் குறைவானதாகும்.
- நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில் 3.34 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- கடந்த 2019 ஆகஸ்ட்டுக்கு பின் அதாவது, 67 மாதங்களில் அதாவது சுமார் 6 ஆண்டுகளில் இதுவே குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும்.
- காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த பிப்ரவரியில் 3.75 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்கள் பணவீக்கம், மார்ச் மாதத்தின் 2.69 சதவீதமாக குறைந்துள்ளது.
- கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இஞ்சி, தக்காளி, பூண்டு போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
- இதனிடையே கடந்த மாதம், நகர்ப்புறங்களில் பணவீக்கம் 3.43 சதவீதமாகவும்; கிராமப்புறங்களில் 3.25 சதவீதமாகவும் இருந்தது.
- இந்தியா-உஸ்பெகிஸ்தான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பான டஸ்ட்லிக்-6 புனேவில் ஆந்திலில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் இன்று (16.04.2025) தொடங்கியது. இந்த பயிற்சி 2025 ஏப்ரல் 28 வரை நடைபெறவுள்ளது.
- 60 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் ஜாட் ரெஜிமென்ட், இந்திய விமானப்படை ஆகியவை பங்கேற்றுள்ளன. உஸ்பெகிஸ்தான் படைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
- கூட்டுப் பயிற்சி டஸ்ட்லிக்-6 என்பது இந்தியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் மாற்றி மாற்றி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். கடந்த பதிப்பு ஏப்ரல் 2024-ல் உஸ்பெகிஸ்தானின் டெர்மெஸ்சில் நடத்தப்பட்டது.
- இந்த பயிற்சியின் கருப்பொருள் "கூட்டு பன்முகக் களம், மரபுசார் செயல்பாடுகள்" என்பதாகும்.