
15th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சி - தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
- சட்டப்பேரவையில் மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் மாநில சுயாட்சி - தீர்மானத்தைத் தாக்கல் செய்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
- மாநில சுயாட்சி உரிமை பறிக்கப்பட்ட வரும் இந்த சூழ்நிலையில் கூட்டாட்சி கருத்துக்களை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய மாநில அரசின் உறவுகளை அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி கூறுகள்; நடைமுறையில் உள்ள சட்டங்கள்; ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறு மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வும் குழு ஒன்றினை அமைப்பது மிக மிக அவசியமாக இருக்கிறது.
- முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அசோக் வர்தன் ரெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டு உயர்நிலைக் குழு அமைக்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.
- அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் 2025 மார்ச் மாதத்திற்கு (மார்ச், 2024 க்கு மேல்) 2.05% ஆக (தற்காலிகமானது) உள்ளது.
- 2025 மார்ச் மாதத்தில் நேர்மறையான பணவீக்க வீதத்திற்கு, உணவுப் பொருள் உற்பத்தி, பிற பொருட்களின் உற்பத்தி, மின்சாரம் மற்றும் ஜவுளி உற்பத்தி போன்றவற்றின் விலை உயர்வே முதன்மையான காரணமாகும்.
- மார்ச் 2025 மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டெண் மாற்றம் பிப்ரவரி, 2025 உடன் ஒப்பிடும்போது (-) 0.19% ஆக உள்ளது.
- இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 243 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவரையேச் சேரும்.
- ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கோப் டஃபி இடம்பெற்றிருந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய வீரர் ஷுப்மன் கில் வென்றிருந்த நிலையில், மார்ச் மாதத்துக்கான விருதினை ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.