
11th APRIL 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்
- உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.
- வாரணாசி சுற்றுச் சாலை, சாரநாத் இடையே சாலை மேம்பாலம், நகரின் பிகாரிபூர், மண்டுவாடி சந்திப்புகளில் மேம்பாலங்கள், வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய நெடுஞ்சாலை 31-ல் ரூ.980 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
- ரூ.1,045 கோடி மதிப்பிலான இரண்டு 400 கிலோவாட் மற்றும் ஒரு 220 கிலோவாட் மின் பகிர்மான துணை மின் நிலையங்களையும், அது தொடர்பான மின் வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- தபேலா, ஓவியம், தண்டாய், திரங்கா பர்பி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான புவிசார் குறியீடு சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார்.
- 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டெண் வளர்ச்சி வீதம் 2.9 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாதத்தில் 5.0 சதவீதமாக இருந்தது.
- சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 1.6 சதவீதம், 2.9 சதவீதம் மற்றும் 3.6 சதவீதமாகும். இத்துறைகளின் உற்பத்தி குறியீடுகள் முறையே 141.9, 148.6 மற்றும் 194.0 ஆக உள்ளன.
- தொழில்துறை சார்ந்த நிறுவனங்களின் உற்பத்தி விகிதம் (உலோகங்கள்), "எஃகு குழாய்கள், எடை குறைவான எஃகு பார்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன.
- மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் போன்ற வாகனங்களின் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி, ஆகியவையும் வளர்ச்சி கண்டுள்ளன.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) 2025 ஏப்ரல் 08-ம் தொடங்கி 10-ம் தேதிக்கு இடையில் எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து, கௌரவ்' எனப்படும் நீண்ட தூரம் சென்று தாக்கும் வெடிகுண்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
- சோதனைகளின் போது, தீவில் தரை இலக்குகளை நோக்கி 100 கி.மீ தூரம் வரை துல்லியமாகப் பயணிக்கும் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.
- எல்.ஆர்.ஜி.பி 'கௌரவ்' என்பது 1,000 கிலோ கிளைட் குண்டு ஆகும். இது சந்திபூரின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இமாராத் ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைந்த சோதனை வரம்பு ஆகியவற்றால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.