மத்தியப் பிரதேச மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் / 9th TIGER RESERVE OF MADHYA PRADESH STATE
TNPSCSHOUTERSMarch 10, 2025
0
மத்தியப் பிரதேச மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் / 9th TIGER RESERVE OF MADHYA PRADESH STATE: மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் உள்ள மாதவ் தேசிய பூங்கா, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமாகும்.
மாதவ் தேசிய பூங்கா 1956 இல் நிறுவப்பட்டது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையும் மறைந்த காங்கிரஸ் தலைவருமான மாதவராவ் சிந்தியாவின் பிறந்த நாளான நாளை, மாதவ் தேசிய பூங்கா, புலிகள் காப்பகமாக மறுவடிவம் காண உள்ளது.
இதற்கு முன், சத்புரா, பெஞ்ச், பந்தவ்கர், கன்ஹா, சஞ்சய் துப்ரி, பன்னா, ராணி துர்காவதி மற்றும் ரதபாணி புலிகள் காப்பகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக, மாதவ் தேசிய பூங்காவை 9வது புலிகள் காப்பகமாக அமைப்பதற்கான முயற்சி முதல்வர் மோகன் யாதவால் 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்த புலிகள் காப்பகம் 1751 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் தற்போது 3 வயது வந்த புலிகளும் 2 புலிக்குட்டிகளும் உள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் பந்தவ்கர் மற்றும் கன்ஹா புலிகள் காப்பகங்களிலிருந்து தலா ஒரு புலி மாதவ் புலிகள் காப்பகத்துக்குக் கொண்டுவரப்பட உள்ளது.
ENGLISH
9th TIGER RESERVE OF MADHYA PRADESH STATE: Madhav National Park in Shivpuri, Madhya Pradesh has been declared a Tiger Reserve. It is the 9th Tiger Reserve in the state.
Madhav National Park was established in 1956. Tomorrow, the birth anniversary of Union Minister Jyotiraditya Scindia's father and late Congress leader Madhav Rao Scindia, Madhav National Park will be rebranded as a Tiger Reserve.
Earlier, Satpura, Bench, Bandhavgarh, Kanha, Sanjay Dupri, Panna, Rani Durgavati and Rathabani Tiger Reserves are operational. Following this, the initiative to make Madhav National Park the 9th Tiger Reserve was launched by Chief Minister Mohan Yadav 6 months ago.
This Tiger Reserve covers an area of 1751 sq km. The Tiger Reserve currently has 3 adult tigers and 2 cubs. One tiger each from Bandhavgarh and Kanha Tiger Reserves in Madhya Pradesh is to be brought to Madhav Tiger Reserve.