
10th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்
- சிப்காட் பூங்காவில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனம் கட்டுமான பணிகள் 100% நிறைவடைந்து உற்பத்தி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.
- இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
- கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் தொழிற்சாலையில் சோப், வாசனைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட உள்ளன.
- குறிப்பாக இந்த தொழிற்சாலையில் பெண்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற தொழிற்சாலை நிர்வாகம், ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
- சாம்பியன் டிராபி கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று மார்ச் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது.
- முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த கிவீஸ் அணி, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் அரைசதங்களால் 251/7 ரன்கள் எடுத்தது.
- 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இறுதியில் 49 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
- சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
- இதற்கு முன்னதாக, இந்திய அணி கடந்த 2002 ஆம் ஆண்டு (இலங்கை அணியுடன் இணைந்து) மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
- ஐசிசி இறுதி ஆட்டத்தில் ரோஹித், கோலி 9-ஆவது முறை பங்கேற்றனா். இந்த கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனை ஆகும். யுவராஜ் சிங் 8 ஐசிசி இறுதி ஆட்டங்களல் ஆடியிருந்தாா்.