Type Here to Get Search Results !

8th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • சர்வதேச மகளிர் நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
  • நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் உலக மகளிர் தின விழா - 2025ல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 100 மகளிருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் சுய உதவிக் குழு மகளிருக்கு 50 நீல நிற மின் ஆட்டோக்கள், தொழிலாளர் நலத் துறை சார்பில் மகளிருக்கு 100 மஞ்சல் நிற ஆட்டோக்கள், உட்பட மகளிருக்கு 250 ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, சங்கு வளையல் கண்டெடுப்பு
  • விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டதில் பணிகள் முழுமையாக முடிந்த 7 குழிகளில் அளவிடும் பணிகள் முடிக்கப்பட்டு குழிகளை மூடும் பணியில் தொழிலார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • 18 குழிகளில் சுடுமண் முத்திரைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள், சுடுமண் விளக்குகள், தங்க அணிகலன், சூது பவளமணி உட்பட 3,800க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. 
  • சமீபத்தில் சுடுமண்ணால் ஆன காதணி, சங்கு வளையல், கண்ணாடி மணிகள், சுடுமண்ணால் ஆன பைக் கோன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.03.2025) தொடங்கி வைத்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது அரசால் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒரு மைல்கல்லாக உள்ளது. 
  • பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது. 
  • இதையொட்டி, மார்ச் 8 அன்று, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, நவ்சாரி மாவட்டம் வன்சி போர்சி கிராமத்தில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று, லட்சாதிபதி சகோதரிகளுடன் கலந்துரையாடினார். 5 லட்சாதிபதி சகோதரிகளுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
  • கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக செயல்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஜி-மைத்ரி திட்டம், நிதி உதவி, வழிகாட்டுதல் ஆதரவு ஆகியவற்றை வழங்கும்.
  • குஜராத்தின் இரண்டு முன்னேற விரும்பும் மாவட்டங்கள், 13 முன்னேற விரும்பும் வட்டங்களில் உள்ள அந்தியோதயா குடும்பங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழு பெண்களுக்கு நிதி உதவி, தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவற்றை ஜி-சஃபல் திட்டம் வழங்கும்.
வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி என்ற கருப்பொருளில் தேசிய மாநாடு - குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
  • குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (மார்ச் 8, 2025) புதுதில்லியில் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி ('நாரி சக்தி சே விக்சித் பாரத்') என்ற தலைப்பில் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 
  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் -  இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்
  • செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கடைசி மற்றும் 9-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் குரேல் எடிஸுடன் மோதினார்.
  • கருப்பு காய்களுடன் விளையாடிய அரவிந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இந்தத் தொடரில் அரவிந்த் சிதம்பரம் ஒரு முறை கூட தோல்வியை சந்திக்கவில்லை. மொத்தம் நடைபெற்ற 9 சுற்றுகளில் 3 வெற்றி, 6 டிராக்களை பதிவு செய்திருந்தார். 
  • மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 2-வது இடம் பிடித்தார். அவர், கடைசி சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். இதில், 40-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel