
7th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த 2 மசோதாக்கள்
- தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.
- இந்த சட்டம், பழுப்புக்கரி, சுண்ணாம்புக் கல், சுண்ணாம்புக் களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது.
- இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- இதைத்தவிர்த்து, தமிழகத்தில் பதவிக்கலாம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகத்துக்கு 1% சந்தைக்கட்டணம் விலக்கு
- தமிழ்நாட்டில் மக்காச்சோளப்பயிர் சராசரியாக 4 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 29 லட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- மக்காச்சோளம் பெரும்பாலும் தீவனத்தயாரிப்புக்காக கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக அதன் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசால் மக்காச்சோள சாகுபடி பெருமளவில் விவசாயிகளிடையே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
- இதனைத்தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கருத்துகளை ஆராய்ந்து அதற்கேற்ப 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தை (முறைப்படுத்துதல்) சட்டம் பிரிவு 9(1)(d)ன் படி வெளியிடப்பட்ட வேளாண் விளைபொருளான மக்காச்சோளத்திற்கான அறிவிக்கை தமிழ்நாட்டின் அனைத்து விற்பனைக்குழு பகுதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
- தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
பார்படாஸ் நாட்டின் மதிப்புமிக்க விருது பிரதமர் மோடிக்கு அறிவிப்பு
- பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் 'Honorary Order of Freedom of Barbados' என்ற மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் அளிக்கப்பட்ட உதவி மற்றும் பிராந்திய தலைமையை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
- மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டு பிரதமர் அமோர் மோடலி குறித்த விருதை வழங்கியுள்ளார். இதனை இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மர்ஹெரிட்டா பெற்றுக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி குறித்த உயர்நிலைக் ஆய்வுக் கூட்டம்
- கூட்டுறவுத் துறையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
- இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வாயிலாக மாற்றத்தைக் கொண்டுவரும் கூட்டுறவுத் துறை மூலம் வளம் என்ற நடைமுறையை ஊக்குவிக்கவும் அத்துறையில், இளைஞர்கள், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் மத்திய கூட்டுறவு அமைச்சகம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
- நாட்டின் கூட்டுறவுத் துறையை விரிவுபடுத்த உலக அளவிலான கூட்டுறவு அமைப்புகளுடன் கூட்டாண்மை தேவை என்று வலியுறுத்திய பிரதமர், கூட்டுறவு அமைப்புகள் மூலம் இயற்கை வேளாண் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- ஏற்றுமதி சந்தைகளில் கவனம் செலுத்தவும், வேளாண் நடைமுறைகளை மேம்படுத்த கூட்டுறவு அமைப்புகள் மூலம் மண் பரிசோதனை மாதிரியை உருவாக்கவும் அவர் பரிந்துரைத்தார்.
- நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்க ரூபே வேளாண் கடன் அட்டைகளுடன் யுபிஐ அமைப்பை ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், கூட்டுறவு அமைப்புகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.