
28th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
- முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 27) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை வெளியிட்டார்.
- தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகள் பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அத்துறைக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள ஏதுவாக துறைவாரியாக தரவு விவரப் புத்தகங்கள் தனித்தனியாக பயன்பாட்டில் உள்ளது.
- இக்குழு பலமுறை கூடி விரிவான விவாதங்களுக்குப் பிறகு, தொகுதி – 1 பொதுப்பணித்துறை, தொகுதி-2 பொதுப்பணித் துறை மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, தொகுதி-3 நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொகுதி 4, 5, 6, 7 & 8 - சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகிய 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் வனப்பகுதியில் அழகர்மலை காப்புக்காடுக்கு அருகில் அமைந்துள்ள காசம்பட்டியை உயிரிய பன்முகச் சட்டம் 2002-ன் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்து, அரசிதழில் இதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ளது.
- இது தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாகும். மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, 2022 ஆம் ஆண்டில் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா, ரெட்டியபட்டி பஞ்சாயத்து, காசம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வீர கோவில் ஒரு கோயில் காடுகள்.
- 4.97 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோயில் காடுகள் இன்றும் காலத்தை வென்று நிலை கொண்டுள்ளது. வீர கோவில் கோயில் காடுகளில் உள்ளூர் தெய்வமான “வீரணன்” குடிகொண்டுள்ளதால் உள்ளூர் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது
- இந்த காடுகள் பல்லுயிர் பன்முகத் தன்மையின் முக்கிய இடமாகும். இக்காடுகள் 48 தாவர இனங்கள், 22 புதர்கள், 21 கொடிகள் மற்றும் 29 மூலிகைகள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் குறிப்பிடத்தக்க பல்லுயிர்களின் தாயகமாகும், இது காடுகளின் பாரம்பரிய செழுமைக்கு பங்களிக்கிறது.
- பாதுகாப்பு அமைச்சகமானது நாக் ஏவுகணை அமைப்பு தடமறியும் வசதி கொண்ட பீரங்கி எதிர்ப்பு பிளாட் ஃபார்ம்கள் வாங்குவதற்கு கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்டுடனும் ஆயுதப்படைகளுக்கு சுமார் 5,000 இலகுரக வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்காக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், & மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஆகியவற்றுடனும் சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான பிரிவின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மார்ச் 27-ம் தேதி புதுதில்லியில் பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
- மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கிய நாக் ஏவுகணை அமைப்பு தடமறியும் வசதி கொண்ட பீரங்கி எதிர்ப்பு பிளாட் ஃபார்ம்கள் அமைப்பை 1,801.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
- பாதுகாப்பு படையை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பாதுகாப்பு படையின் செயல்பாட்டு தயார்நிலையை மேம்படுத்த உதவுகிறது. நாக் ஏவுகணை அமைப்பு தடம் அறியும் பீரங்கி எதிர்ப்பு என்பது அதிநவீன டாங்க் எதிர்ப்பு ஆயுத அமைப்பாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பீகாரில் பாட்னாவில் தொடங்கி சசாரம் (120.10 கிலோமீட்டர்) வரை பாட்னா – அர்ரா – சசாரம் இடையேயான நான்கு வழிச் சாலையை பசுமை மற்றும் பிரவுன் ஃபீல்ட் சாலையாக அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் ரூ.3,712.40 கோடி செலவில் ஹைபிரிட் முறையில் அமைக்கப்படும்.
- தற்போது, சசாராம், அர்ரா, பாட்னா இடையேயான சாலையில் நடைபெற்று வரும் போக்குவரத்து மாநில நெடுஞ்சாலைகளைச் சார்ந்துள்ளது. இதன் காரணமாக அர்ரா நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- அர்ரா, கிராஹினி, பைரோ, பிக்ரம்கஞ்ச், மோகர், சசாராம் போன்ற இடங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்துக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு அதனைப் பூர்த்தி செய்யும் வகையில், தற்போதுள்ள பிரவுன்ஃபீல்ட் நெடுஞ்சாலையின் 10.6 கி.மீ தொலைவிலான சாலைகளை மேம்படுத்துவதுடன் பசுமை நடைபாதையும் உருவாக்கப்படும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத்தொகை ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.01.2025 முதல் விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகிய இரண்டும் உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த செலவு தாக்கம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6614.04 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 48.66 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
- 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு (01.04.2025 முதல் 30.09.2025 வரை) கரீஃப் பருவத்தில் (01.04.2025 முதல் 30.09.2025 வரை) ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பதற்கான உரத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- 2024 காரீப் பருவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடாக ரூ.37,216.15 கோடியாக இருக்கும். இது 2024-25 ரபி பருவங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ.13,000 கோடி கூடுதலாகும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரூ.22,919 கோடி நிதி உதவியுடன் மின்னணுப் பொருட்கள் வழங்கல் தொடரில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- திறன் மேம்பாடு, உலகளாவிய மதிப்புத் தொடருடன் இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மதிப்புக் கூடுதலை அதிகரித்து, மின்னணு சாதன உற்பத்தி சூழலில் பெருமளவு முதலீடுகளை (உலகளாவிய / உள்நாட்டு) ஈர்க்கும் வகையில், வலுவான உபகரண சூழல் அமைப்பை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஜல் சக்தி அமைச்சகத்தின் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டம் விரைவுபடுத்தப்பட்ட பாசனப் பயன்கள் திட்டத்தின் கீழ், பீகாரில் கோசி மெச்சி இடையேயான இணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 6,282.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 2029 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றும் வகையில் பீகார் மாநிலத்துக்கு 3,652.56 கோடி ரூபாயை மத்திய அரசின் பங்காக விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- கோசி மெச்சி இடையே பாசன இணைப்புத் திட்டத்தின் கீழ், கோசி ஆற்றின் உபரி நீரின் ஒரு பகுதியை தற்போதுள்ள கிழக்கு கோசி பிரதான கால்வாயை மறுவடிவமைத்து சீரமைப்பதன் மூலம் அம்மாநிலத்தில் அமைந்துள்ள மகாநந்தா படுகைக்கு நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்த உதவிடும்.
- இந்தப் பாசன இணைப்புத் திட்டம், பீகாரில் அராரியா, பூர்னியா, கிஷன்கஞ்ச், கடிஹார் மாவட்டங்களில் காரீப் பருவத்தில் கூடுதலாக 2,10,516 ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும்.