
23rd MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மணிப்பூரில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான குழு ஆய்வு
- வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள சூரசந்த்பூர் (Churachandpur) மற்றும் மெய்தி சமூகத்தினர் அதிகம் உள்ள பிஷ்ணுபூர் பகுதிகளில் ஆய்வு நடத்திய நீதிபதிகள் குழு, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்ட உதவி மையம் மற்றும் சுகாதார மையங்களைத் திறந்து வைத்தனர்.
- இதையடுத்து சூரசந்த்பூரில் குகி சமூகத்தினருக்கான நிவாரண முகாமை நீதிபதிகள் குழு பார்வையிட்ட நிலையில், அரசியலமைப்பு மீது நம்பிக்கை வைக்கும்படியும், அமைதி திரும்ப அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி பி.ஆர். கவாய் கேட்டுக் கொண்டார்.
- மேலும் மக்கள் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு அரசு நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நீதித்துறை இணைந்து விரைவாக தீர்வு காணும் என்றும் உறுதியளித்தார்.
- அரசியலமைப்பு சட்டம் நம்மை ஒற்றுமையாகவும், வலிமையாகவும் வைத்திருப்பதாகக் கூறிய நீதிபதி கவாய், மணிப்பூரில் அமைதி திரும்புவதை அரசியலமைப்பு சட்டம் ஒரு நாள் உறுதி செய்யும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
- தொடர்ந்து இன்று மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் 12 ஆவது ஆண்டு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு பங்கேற்க உள்ளது.
- கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (ஜிஎஸ்எல்) கட்டிய 'தவஸ்யா' என்று பெயரிடப்பட்ட திட்டம் 1135.6 கூடுதல் வரிசைக் கப்பல்களின் இரண்டாவது போர்க்கப்பல், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் முன்னிலையில் இன்று (மார்ச் 22, 2025) அன்று கோவாவில் உள்ள ஜிஎஸ்எல் தளத்தில் அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்த போர்க்கப்பல்கள் பி1135.6 கப்பல்களின் தொடர் வரிசையாகும். இவை இப்போது இந்திய கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே கட்டப்பட்டு வருகின்றன.
- இரண்டு ப்ராஜெக்ட் 1135.6 வரிசை போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே 25 ஜனவரி 2019 அன்று கையெழுத்தானது.
- முதல் கப்பல் 'டிரிபுட்' 23 ஜூலை 2024 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கப்பல்கள் தரை, கடலுக்கு அடியில், வான்வழி போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
- 'திரிபுத்', 'தவஸ்யா' ஆகியவை 124.8 மீட்டர் நீளமும் 15.2 மீட்டர் அகலமும் கொண்டவை. 'திரிபுத்', 'தவாஸ்யா' ஆகியவை உள்நாட்டு மூல உபகரணங்கள், ஆயுதங்கள், சென்சார்களில் அதிக சதவீதத்தைக் கொண்டுள்ளன.
- கலை - கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையான இன்டாக்-கின் (INTACH) ஆண்டுக் கூட்டம், இன்று (22 மார்ச் 2025) புதுதில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- இதில் தலைவர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது.
- உரிய நடைமுறைகளைப் பின்பற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திரு அசோக் சிங் தாக்கூர் மூன்று ஆண்டு காலத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.