
21st MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு பாதுகாப்பு துறை ஒப்புதல்
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில் முன்மொழியப்பட்ட ரூ.54,000 கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டங்களுக்கு நேற்று(20.03.25) ஒப்புதல் அளித்துள்ளது.
- அதன்படி, இந்திய ராணுவத்தில் உள்ள டி-90 பீஷ்மா டாங்கிகளுக்கு, தற்போதுள்ள 1000 ஹெச்பி என்ஜினை மேம்படுத்தும் வகையில் 1,350 ஹெச்பி என்ஜின் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இது, சக்திக்கும் எடைக்கும் இடையிலான விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், இந்த டாங்கிகள் போர்க்களத்தில் தனது இயக்கத்தை, குறிப்பாக உயரமான பகுதிகளில் மேம்படுத்தும்.
- இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவத்தில் தற்போது 105 மற்றும் 130 எம்எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- இவற்றுக்கு மாற்றாக ரூ.7,000 கோடி மதிப்பில் 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில் இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 307 நவீன பீரங்கிகள், அதை இழுத்துச் செல்வதற்கு 327 வாகனங்களும் வாங்கப்படும். இந்த பீரங்கிகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளுக்கு அனுப்பப்படும்.
- கிரீஸ் நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144-வது சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் கூட்டத்தில் 10-வது தலைவருக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
- இவர்களுக்குள் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 41 வயதான ஜிம்பாப்வே விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த கிறிஸ்டி கோவென்ட்ரி வெற்றி பெற்றார்.
- 2013 ஆம் ஆண்டில் முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாக், மீண்டும் 2021 ஆம் ஆண்டில் தலைவரானார். அவருக்குப் பின்னர் கிறிஸ்டி கோவென்ட்ரி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 23 ஆம் தேதி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றப்போகும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் கிறிஸ்டி.
- ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றவரான கிறிஸ்டி, 2033 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் பதவி வகிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.