
19th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வெம்பக்கோட்டை அகழாய்வில் முதன்முதலாகக் கிடைத்த ஈயம்
- விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- 3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,500-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
- இந்த நிலையில், இன்று(மார்ச் 19) நடைபெற்ற அகழாய்வின் போது சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம், இரும்பு மற்றும் ஈயம் கிடைத்துள்ளது.
- 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதன்முதலாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ஜவஹர்லால் நேரு துறைமுகம் (பகோட்) தொடங்கி மகாராஷ்டிராவில் சவுக் (29.219 கிலோமீட்டர்) வரை 6 வழி அணுகல் கட்டுப்பாட்டு பசுமை (கிரீன்ஃபீல்ட்) அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் ₹ 4500.62 கோடி மூலதன செலவில் கட்டுதல், இயக்குதல், மாற்றித் தருதல் என்ற முறைப்படி அமைக்கப்படும்.
- பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டக் கோட்பாடுகளின் கீழ் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டமிடலின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்று இந்தியாவில் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களுடன் சாலை வசதியை இணைக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகும்.
- ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் கொள்கலன் அளவு அதிகரித்து வருவதாலும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வளர்ச்சியாலும், இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது.
- புதிய 6 வழி பசுமை வழித்தடம் சிறந்த துறைமுக இணைப்புக்கு வழிவகுக்கும். பாதுகாப்பான, திறன் வாய்ந்த சரக்குப் போக்குவரத்துக்கும் உதவும். இந்தத் திட்டம் மும்பை, புனே அதைச் சுற்றியுள்ள வளரும் பிராந்தியங்களில் செழிப்புக்கான புதிய வழிகளை திறக்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, பால்வள மேம்பாட்டுக்கான திருத்தப்பட்ட தேசிய திட்டமான என்பிடிடி (NPDD) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய அரசின் திட்டமான திருத்தப்பட்ட என்பிடிடி, கூடுதலாக 1000 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டு, பதினைந்தாவது நிதிக்குழு காலத்திற்கான (2021-22 முதல் 2025-26 வரை) மொத்த நிதி ஒதுக்கீடு ₹2790 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த முயற்சி பால்வள உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது துறையின் நிலையான வளர்ச்சியையும் உற்பத்தித்திறனையும் உறுதி செய்கிறது.
- திருத்தியமைக்கப்பட்ட என்பிடிடி, பால் கொள்முதல், பதப்படுத்தும் திறன், சிறந்த தரக்கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும். இதன் மூலம் பால்வளத் துறைக்கு உத்வேகம் அளிக்கும்.
- விவசாயிகள் சந்தைகளுக்கு சிறந்த அணுகலைப் பெற உதவுவது, மதிப்புக் கூட்டல் மூலம் சிறந்த விலையை உறுதி செய்வது, விநியோகச் சங்கிலியின் செயல்திறனை மேம்படுத்துவது, அதிக வருமானம், அதிக கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, கால்நடைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக திருத்தியமைக்கப்பட்ட தேசிய கால்நடை இயக்கத்திற்கு( (ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்) ஒப்புதல் அளித்தது.
- 2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதிக்குழு காலத்தின் போது, 1000 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டில், அதாவது 3400 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதில் இரண்டு புதிய செயல்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- மொத்தம் 15,000 கிடேரிகளைக் கொண்ட 30 குடியிருப்பு வசதிகளை உருவாக்க செயலாக்க முகமைகளுக்கு கிடேரி வளர்ப்பு மையங்கள் அமைப்பதற்கான மூலதன செலவில் 35% ஒரு முறை வழங்குதல்
- உயர் மரபுத் தன்மை கொண்ட கிடாரிகளை(கன்று ஈனாத இளம் பசு)வாங்குவதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல், பால் ஒன்றியங்கள் / நிதி நிறுவனங்கள் / வங்கிகளிடமிருந்து விவசாயிகள் வாங்கும் கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்குதல்.
- திருத்தியமைக்கப்பட்ட தேசிய கால்நடை (ராஷ்ட்ரிய கோகுல்) இயக்கத்திற்கு 15-வது நிதிக்குழு சுழற்சியில் (2021-22 முதல் 2025-26 வரை) ₹3400 கோடி ஒதுக்கீட்டுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, அசாமில் உள்ள பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரக் கழக வளாகத்தில் ரூபாய் 10,601.40 கோடி திட்ட மதிப்பீட்டில், ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தித் திறன் கொண்ட புதிய பிரவுன்ஃபீல்ட் அமோனியா – யூரியா வளாகம் அமைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- புதிய முதலீட்டுக் கொள்கை 2012-ன் கீழ் கடன் ஈவு பங்கு விகிதம் 70:30 என்ற விகிதத்தில் இது அமைக்கப்பட உள்ளது. நாம்ரூப்-4 திட்டத்தை செயல்படுத்துவதற்கான உத்தேச காலம் 48 மாதங்கள் ஆகும்.
- அசாம் அரசு 40%, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழக நிறுவனம்: 11%, இந்துஸ்தான் உர்வாரக் & ரசாயன நிறுவனம் 13%, தேசிய உர நிறுவனம் 18%, இந்திய ஆயில் நிறுவனம் 18% என்ற விகிதத்தில் கடன் ஈவு பங்கு விகிதம் இருக்கும்.
- இந்தத் திட்டம் உள்நாட்டில் குறிப்பாக வடகிழக்கு பகுதியில் யூரியா உற்பத்தித் திறனை அதிகரிக்கும். இது வடகிழக்கு, பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிகரித்து வரும் யூரியா உரங்களின் தேவையை பூர்த்தி செய்யும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் தனிநபர் – வியாபாரிகள் (P2M) இடையே பீம் செயலி மூலம் மேற்கொள்ளும் குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி 01.04.2024 முதல் 31.03.2025 வரையிலான காலகட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
- சிறு வணிகர்களுக்கு 2000 ரூபாய் வரையிலான பீம் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். ஊக்கத்தொகையாக ஒவ்வொரு பண பரிவர்தனைகளுக்கும் தலா 0.15% ஊக்கத்தொகை வழங்கப்படும்.