
17th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழர் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும் ஆவண நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
- தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்' ஆவண நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, இதற்கான சிறப்பு இணையப் பக்கத்தைத் (https://www.tamildigitallibrary.in/budget) தொடங்கி வைத்தார்.
- இதில் பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், காலனிய கால நிதிநிர்வாக நடைமுறைகள், நவீன தமிழகத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.
- அரிய தகவல்களும் தரவுகளும் நிறைந்துள்ள இந்நூல் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வந்த வரலாற்றையும், தமிழகத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.
- இந்த ஆவண நூலில், பொருளியல், வரலாற்றுத் துறைகளைச் சேர்ந்த தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
- பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸன் 2025 மார்ச் 16 முதல் 20-ம் தேதி வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
- நியூசிலாந்து பிரதமராகப் பொறுப்பெற்ற பிறகு, இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் லக்சன், புதுதில்லி, மும்பை நகரங்களுக்கு செல்கிறார்.
- அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு லூயிஸ் அப்ஸ்டன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மார்க் மிட்செல், வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு டோட் மெக்லே, ஆகியோர் அவருடன் வந்துள்ளனர்.
- மேலும், அந்நாட்டு அதிகாரிகள், வர்த்தகர்கள், சமூக புலம்பெயர்ந்தோர், ஊடகம் மற்றும் கலாச்சார குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைத் தூதுக்குழுவும் இந்தியா வந்துள்ளது.
- இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் லக்சனுக்கு புதுதில்லியில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் திரு. லக்சனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
- புதுதில்லியில் நடைபெறும் 10-வது ரைசினா மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி 17 மார்ச் 2025-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
- இந்த மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் லக்சன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றுகிறார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசினார்.
- ஜனநாயக நடைமுறைகள், வலுவான மக்கள் தொடர்பு, ஆகியவற்றில் இந்தியா-நியூசிலாந்துக்கு இடையே வளர்ந்து வரும் இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்துவது என இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
- இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும், அவர்கள் ஆலோசித்தனர். வர்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், விண்வெளி, மக்கள் தொடர்பு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என ஒப்புக்கொண்டனர்.
- அகில இந்திய அளிவில் மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான 2025 பிப்ரவரி மாதத்திற்கான ஆண்டு பணவீக்க விகிதம் 2.38% (தற்காலிகமானது) ஆக உள்ளது.
- 2025 பிப்ரவரி மாதத்தில் நேர்மறையான பணவீக்க வீதத்திற்கு, உணவுப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த பிற உற்பத்தி, உணவு அல்லாத பொருட்கள், ஜவுளி உற்பத்தி போன்றவற்றின் விலை உயர்வே முதன்மையான காரணிகளாகும்.
- உணவுப் பொருட்களின் விலை (-2.05%), கச்சா பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு (-1.46%), தாதுக்கள் (-1.26%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-0.36%) 2025 ஜனவரி 2025 உடன் ஒப்பிடும்போது பிப்ரவரியில் குறைந்துள்ளது. இந்த முக்கிய பொருட்களுக்கான குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 189.9-ஆகவும், பிப்ரவரி மாதத்தில், 1.74% குறைந்து 186.6-ஆகவும் இருந்தது.
- மின்சாரம் (4.28%) மற்றும் தாது எண்ணெய்கள் (1.87%) ஆகியவற்றின் விலை 2025 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 2025 பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. இவற்றின் குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 150.6-ஆகவும், பிப்ரவரி மாதத்தில் 2.12% அதிகரித்து 153.8-ஆகவும் உள்ளது. நிலக்கரியின் விலை முந்தைய மாதத்தின் குறியீடு அளவிலேயே இருந்தது.
- உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான 22 என்.ஐ.சி இரண்டு இலக்கமாகவும், 17 வகையான பொருட்கள் விலை உயர்வையும் கண்டுள்ளன. இதற்கான குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 143.2-ஆகவும், பிப்ரவரி மாதத்தில், 0.42% அதிகரித்து 143.8-ஆகவும் உள்ளது.
- சில முக்கிய பொருட்கள், பிற பொருட்களின் உற்பத்தி; உணவுப் பொருட்களின் உற்பத்தி; அடிப்படை உலோகங்கள்; ஏனைய உலோகமல்லாத கனிமப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள் போன்றவை விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளன.