
15th MARCH 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
யுனெஸ்கோ அங்கீகாரத்திற்கான தற்காலிக பட்டியலில் இந்தியாவின் 6 இடங்கள் சேர்ப்பு
- உலகத்தின் புராதன சின்னங்களின் வரிசையில் இந்தியாவை சேர்ந்த இயற்கை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
- மாமல்லபுரம் கடற்கரை கோயில், குதுப்மினார், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் உள்ளிட்ட 43 இடங்களை உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.
- இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 6 இடங்கள் யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கர் பள்ளதாக்கு பூங்கா,தெலங்கானா மாநிலம் முதுமல்லில் உள்ள பண்டைய காலத்து செங்குத்தான கற்கள், பல மாநிலங்களில் உள்ள அசோகரின் ஆணைகள் குறித்த கல்வெட்டுகள், சவுசாத் யோகினி கோயில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள குப்தர்கள் கோயில், மபி, உபியில் உள்ள பண்டேலா ராஜ்யத்து மாளிகை மற்றும் கோட்டைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- இதன் மூலம் யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்கான தற்காலிக பட்டியலில் உள்ள இந்திய இடங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.