
8th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025
- 70 தொகுதிகளை கொண்ட நாட்டின் தலைநகரான டெல்லி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இதன் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
- வாக்கு எண்ணும் பணியில் 5000 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 19 மையங்களில் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத்தொடர்ந்து மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியின் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். 40 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியைபிடிக்கவிருக்கிறது பாஜக கட்சி.
- முன்னாள் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், புது டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். அதேபோல மணீஷ் சிசோடியாவும் ஜங்புரா தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார்.
- பாதுகாப்பு அமைச்சகம், இன்று (2025 பிப்ரவரி 08) புதுதில்லியில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடன் 11 புதிய தலைமுறை கடல் ரோந்து கப்பல்களுக்கான 28 இஓஎன்-51 அமைப்புகளுக்கும் இந்திய கடற்படைக்கு மூன்று கேடட் பயிற்சி கப்பல்களை வாங்குவதற்குமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
- இஓஎன்-51 என்பது எலக்ட்ரோ ஆப்டிகல் தீ கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். இது எலக்ட்ரோ ஆப்டிகல், தெர்மல் இமேஜர்ஸ் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலக்குகளைத் தேடுதல், கண்டறிதல், வகைப்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது.
- இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளில் பல வேலைவாய்ப்பை உருவாக்கும். அத்துடன் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய தொழில்துறைகளின் தீவிர பங்கேற்பை ஊக்குவிக்கும்.
- பாதுகாப்பில் 'தற்சார்பு' என்ற இலக்கை அடைவதற்கான அரசின் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இது வழங்கும்.
- இரு வருட ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு இன்று (2025 பிப்ரவரி 08) கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விமான தகுதி சான்றிதழ் மையம் (செமிலாக்), ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (ஏஎஸ்ஐ) உடன் இணைந்து ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோடியாக இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
- இந்தக் கருத்தரங்கு உலகளாவிய விண்வெளி அரங்கில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டு கருப்பொருள் 'எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள்: வடிவமைப்பு சரிபார்ப்பில் சவால்கள்' என்பதாகும்.
- எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்களில் வளர்ந்து வரும் போக்குகள், ராணுவ விமானத் தகுதி சான்றிதழ், வடிவமைப்பு, சோதனை ஆகியவற்றில் உள்ள சவால்கள் குறித்த விவாதங்களும் அதற்கான தீர்வுகளும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.