
6th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்
- இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்தும், யூத வரலாற்றை அழிப்பதாகக் கூறி யுனெஸ்கோவிலிருந்தும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடந்த 2019-ஆம் ஆண்டு விலகின. அப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தாா்.
- எனினும் அவருக்குப் பிறகு அமைந்த ஜோ பைடன் தலைமையிலான அரசு, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்காவை கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் இணைத்தது.
- இந்தச் சூழலில், 2024 நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் மீண்டும் பொறுப்பேற்றாா்.
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்காவை மீண்டும் விலக்கும் உத்தரவை டிரம்ப் தற்போது பிறப்பித்துள்ளாா். இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது.
- பலவகையான ராக்கெட்டு ஏவும் அமைப்புகளை கொள்முதல் செய்வதற்காக, எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ் லிமிடெட் (இஇஎல்) மற்றும் முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (எம்ஐஎல்) ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம், மொத்தம் ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
- மேலும் சக்தி மென்பொருள் மேம்பாட்டிற்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது. புது தில்லியில் பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- துல்லியமான மற்றும் நீண்ட தூர தாக்குதல்களை செயல்படுத்த, இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சுடுதல் திறனை வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
- தேசிய பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதுடன், இந்தத் திட்டங்கள் இந்திய சிறு குறு நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கும். நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
- இந்தியாவின் பாதுகாப்பு உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும், உள்நாட்டுத் தொழில்களை மேம்படுத்துவதற்கும் இந்தக் கொள்முதல் ஒரு முக்கிய படியாகும்.