
2nd FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழக ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்வு
- உலக ஈரநிலங்கள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20-ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 19 இடங்கள் நாம் 2021-இல் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடங்கியதற்குப் பிறகு ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் 12.3% அதிகரித்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- 2025ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் மொத்தமாக ரூ.1.96 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 2024ம் ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி மொத்த வசூல் ரூ.1.74 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் 12.3% அதிகரித்துள்ளது.
- 2024-25ம் ஆண்டில் (ஏப்ரல் முதல் ஜனவரி வரை) இதுவரை மொத்த ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் அதிகரித்து ரூ.18.29 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023-24ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.16.71 லட்சம் கோடியாக இருந்தது.
- 2023-24 நிதியாண்டில் மொத்த மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20.18 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.இது முந்தைய நிதியாண்டை விட 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டு ஏப்ரலில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.2.10 லட்சம் கோடியாக உயர்ந்து சாதனை படைத்திருந்தது.
- டி20 உலகக்கோப்பையை வெல்ல உலகில் உள்ள 16 நாடுகளான மலேசியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஸ்காட்லாந்து, சமோவா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம், நைஜீரியா முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- இந்நிலையில் கோப்பை வெல்வதற்கான இறுதிப்போட்டியானது மலேசியாவில் பரபரப்பாக தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்து விளையாடியது.
- ஆனால் இந்திய ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத தென்னாப்பிரிக்கா பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
- இந்திய ஸ்பின்னர்கள் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா 82 ரன்களே சேர்த்தது.
- நடப்பு உலகக்கோப்பை சாம்பியனான இந்திய அணி மீண்டும் கோப்பையை தக்கவைத்துகொள்ள 83 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது.
- எளிதான இலக்கை துரத்திய இந்திய வீரர்கள் 11.2 ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தனர்.
- யு19 மகளிருக்கான டி20 உலகக்கோப்பை முதல்முறையாக கடந்த 2022-23ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில், அதில் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி.
- இந்த நிலையில் இரண்டாவது முறையாக நடைபெற்ற யு19 மகளிர் டி20 உலகக்கோப்பையையும் வென்று தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக்கோப்பையை வென்று மகுடம் சூடியுள்ளது இந்திய அணி.