Type Here to Get Search Results !

இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி குறித்த அறிக்கை 2025 / REPORT ON ELECTRONICS MANUFACTURING IN INDIA 2025

  • இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி குறித்த அறிக்கை 2025 / REPORT ON ELECTRONICS MANUFACTURING IN INDIA 2025: மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தமிழ்நாடு 9.36 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.
  • முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான சாதனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. அதிலிருந்து சற்று குறைந்திருந்தாலும் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 39% ஆக உள்ளது.
  • 2024-25 நிதியாண்டில் ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் இருந்து 26.12 பில்லியன் டாலர் மதிப்பிலான எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன.
  • கர்நாடகா (4.95 பில்லியன் டாலர்), உத்தரப் பிரதேசம் (3.78 பில்லியன் டாலர்), மகாராஷ்டிரா (2.72 பில்லியன் டாலர்) தமிழ்நாட்டுக்கு அடுத்த இடங்களில் உள்ளன.
  • கடந்த டிசம்பரில், தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்றுமதி சிறிது சரிவு கண்டது. 2024 நவம்பர் இல் 1.534 பில்லியன் டாலர் ஏற்றமதி செய்திருந்த நிலையில் 2024 டிசம்பரில் 1.524 பில்லியன் டாலராக லேசாகக் குறைந்துள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை முந்தி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 
  • 2023-24 நிதியாண்டிலும் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் சாதனங்களை ஏற்றுமதி செய்த தமிழ்நாடு ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 32.84% பங்களிப்பைச் செய்து முதல் இடத்தைப் பெற்றது. அதுவும் 2 வருடங்களுக்கு முன் 1.86 பில்லியனாக இருந்த ஏற்றுமதி மதிப்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
  • தமிழ்நாட்டின் மின்னணு சாதன ஏற்றுமதியில் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை விரிவுபடுத்த உள்ளது. புதிய யூனிட் மூலம் 50,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ENGLISH

  • REPORT ON ELECTRONICS MANUFACTURING IN INDIA 2025: Tamil Nadu has once again taken the top spot in the manufacturing of electronic devices. In the financial year 2024-25, Tamil Nadu exported electronic products worth $ 9.36 billion from April to December.
  • It had exported devices worth $ 9.56 billion in the same period last year. Although it has decreased slightly, Tamil Nadu's contribution to the country's overall exports is 39%. In the financial year 2024-25, electronic devices worth $ 26.12 billion were exported from India during the April-December period.
  • Karnataka ($ 4.95 billion), Uttar Pradesh ($ 3.78 billion), and Maharashtra ($ 2.72 billion) are next to Tamil Nadu. Last December, Tamil Nadu's electronic device exports saw a slight decline. It had exported $ 1.534 billion in November 2024 and decreased slightly to $ 1.524 billion in December 2024. However, Tamil Nadu continues to be at the top, ahead of other states.
  • In the financial year 2023-24, Tamil Nadu, which exported electronic devices worth $ 9.56 billion, took the first place by contributing 32.84% to the total exports. That too, the export value of which was $ 1.86 billion 2 years ago has grown tremendously.
  • The iPhones manufactured here play a major role in Tamil Nadu's electronic device exports. Tata Electronics is planning to expand its iPhone assembly unit in Hosur. It is said that the new unit will provide employment to more than 50,000 people.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel