
19th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1,554 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
- 2024ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றிற்காக உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி ஆந்திரா, தெலங்கானா, நாகாலாந்து, ஒடிசா, திரிபுரா ஆகிய 5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ஏற்கனவே 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி நிதி விடுக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால். ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக ரூ.37 ஆயிரம் கோடி நிதி வழங்க கோரிக்கை வைத்தும், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
- பீகார், ஹரியானா, சிக்கிமில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
- பீகார் மாநிலத்திற்கு 2-வது தவணையாக ரூ.821.8021 கோடியையும், நிபந்தனையற்ற மானியங்களின் முதல் தவணையில் நிலுவையாக இருந்த ரூ.47.9339 கோடியும் அளிக்கட்டுள்ளது.
- ஹரியானாவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் 2-வது தவணையாக ரூ.202.4663 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியத் தொகையையும், நிபந்தனையற்ற மானியத் தொகையின் முதல் தவணையில் நிலுவையாக உள்ள ரூ.7.5993 கோடியும் பெறும்.
- சிக்கிம் மாநிலத்திற்கு 2024-25-ம் நிதியாண்டில் ரூ.6.2613 கோடி மதிப்புள்ள இரண்டாவது தவணையாக நிபந்தனையற்ற மானியத்தைப் பெறுகிறது.
- டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவுநிறுவனம் மற்றும் அர்க்யம் ஆகியவை நீர், துப்புரவு, தூய்மை (வாஷ்) பிரிவுக்கான மின்னணு பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- இந்த முயற்சி மின்னணு தீர்வுகள் மூலம் நீர், சுகாதார சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முயற்சியுடன் ஒத்திசைவானதாக உள்ளது.
- நீர்வள இயக்கம், தூய்மை பாரத இயக்கம் ஆகியவற்றை ஆதரிப்பதற்காக மின்னணு சூழல் அமைப்பை வடிவமைத்து செயல்படுத்துவதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- நீர் வளங்களைப் பராமரிப்பதற்கு அரசு நிறுவனங்களை வலுப்படுத்தல், நிலையான நீர் மேலாண்மைக்கான பங்கேற்பு மின்னணு தளங்களை உருவாக்குதல் ஆகியவை கவனம் செலுத்தப்படும் முக்கியப் பகுதிகளாகும்.
- மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத்துறைச் செயலாளர், மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் அர்ஜென்டினாவின் கட்டமர்கா மாகாண ஆளுநர் திரு ரவுல் அலெஜான்ட்ரோ ஜலீலை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர்.
- சுரங்கத்துறையில், குறிப்பாக லித்தியம் துரப்பணப் பணி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன.
- சுரங்க அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் (MECL) அர்ஜென்டினாவின் கேடமார்கா மாகாண அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக இந்த ஒப்பந்தம் விளங்குகிறது.