
15th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மருங்கூரில் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு
- பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- 360 செ.மீ. ஆழத்தில் 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினால் ஆன பொருள் பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் இதுவரை இரும்பு பொருட்கள், காசுகள், அஞ்சனக் கோல் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்பின் மூலம் மருங்கூரில் சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளது தெரிகிறது என தெரிவித்தார்.
- மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் 2-வது எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு 2025-ஐ இன்று (15.02.2025) தொடங்கி வைத்தார்.
- ஜஜ்ஜார் எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் (என்சிஐ) இந்தியாவின் மிகப்பெரிய பொது சுகாதார நிறுவனங்களில் ஒன்றாகும். இது புதுமையான புற்றுநோய் பராமரிப்பு, ஆராய்ச்சி திறன்களைக் கொண்டுள்ளது.
- எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாடு, இந்தியாவின் அனைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலும் புற்றுநோயியல் துறையில் உள்ள முன்னணி நிபுணர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.
- புற்றுநோய் பராமரிப்பு, சிகிச்சை முறைகள், தற்போதைய ஆராய்ச்சி முயற்சிகள் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.