
12th FEBRUARY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு
- ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் சார்பில் 2024ம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது.
- இந்த ஆய்வில், வருடாந்திர தரவரிசையில் சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தை ஒன்றிய அரசு தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது.
- இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார், அதற்கான சான்றிதழை இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
- அப்போது தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாருர் எஸ்பி கருண்கரட், முத்துப்பேட்டை டிஎஸ்பி ஆனந்த், திருவாரூர் மாவட்ட குற்றப்பதிவேடுகள் துணைக்காவல் கண்காணிப்பாளர் பிலிப் பிராங்க்ளின் கென்னடி மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
- பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானும் தனிப்பட்ட நல்லுறவைப் பிரதிபலிக்கும் வகையில், நேற்று பாரிஸிலிருந்து மர்சேயிலுக்கு பிரான்ஸ் அதிபர் விமானத்தில் ஒன்றாகப் பயணித்தனர்.
- இரு தரப்பு உறவுகளின் முழு பரிமாணங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய, பிராந்திய பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
- மர்சேயில் வந்து இறங்கிய பின்னர் தூதுக்குழு நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தன. கடந்த 25 ஆண்டுகளில் பன்முக உறவாக சீராக உருவாகியுள்ள இந்தியா - பிரான்ஸ் கூட்டாண்மைக்கான தங்கள் வலுவான உறுதிப்பாட்டை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
- இந்தியா - பிரான்ஸ் கூட்டாண்மையின் அனைத்து அம்சங்களையும் இந்தப் பேச்சுவார்த்தைகள் உள்ளடக்கியிருந்தன. பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, விண்வெளி ஆகிய முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
- தொழில்நுட்பம் மற்றும் புதுமை, சிவில் அணுசக்தி, சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் ஆகிய துறைகளில் பத்து முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.
- மர்சேய் அருகே உள்ள கடலோர நகரமான காசிஸில் பிரதமரைக் கவுரவிக்கும் வகையில் அதிபர் மெக்ரான் இரவு விருந்து வழங்கினார். அதிபர் மெக்ரானை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் அழைத்தார்.
- உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால், சில்லரை விலை பணவீக்கம், ஜனவரியில் 4.31% குறைந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.22 சதவிகிதமாகவும், 2024 ஜனவரியில் 5.1 சதவிகிதமாகவும் இருந்தது.
- உணவுப் பொருட்களின் பணவீக்கம் 6.02 சதவிகிதமாகவும், இது டிசம்பரில் 8.39 சதவிகிதமாகவும், கடந்த ஆண்டு 8.3 சதவிகிதமாகவும் இருந்தது. சில்லறை பணவீக்கம் 4 சதவிகிதமாக இருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.